சுருளி அருவியில் குளிக்க அனுமதி

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கம்பம் : சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் உள்ளது. மேகமலை பகுதியில் மழை பெய்தால், அருவியில் தண்ணீர் கொட்டும். நேற்று முன்தினம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறை குளிக்க தடை விதித்தது. நேற்று காலை வெள்ளம் குறைய துவங்கியது. எனவே

கம்பம் : சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் உள்ளது.

மேகமலை பகுதியில் மழை பெய்தால், அருவியில் தண்ணீர் கொட்டும். நேற்று முன்தினம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறை குளிக்க தடை விதித்தது. நேற்று காலை வெள்ளம் குறைய துவங்கியது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கம்பம் கிழக்கு ( பொ ) ரேஞ்சர் அருண்குமார் கூறுகையில், " இரவங்கலாறு பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.தற்போது குறைந்துள்ளது. எனவே குளிக்க அனுமதி வழங்கி உள்ளோம். மேகமலையில் மழை அதிகரிக்கும் போது அருவிக்கு செல்ல அனுமதி இல்லை." என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X