கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 19.30 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 170 மூட்டைகள், எள் 150, வேர்க்கடலை 20, சிவப்பு சோளம் 10, வரகு 5, கம்பு 3, ராகி, உளுந்து தேங்காய் பருப்பு தலா 2, தட்டைப்பயறு ஒரு மூட்டை என 163 விவசாயிகள் 365 மூட்டை விளை பொருட்களைக் கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,457 ரூபாய், எள் 8,619, வேர்க்கடலை 7,159, சிவப்பு சோளம் 2,819, வரகு 1,629, கம்பு 3,141, ராகி 1,839, உளுந்து 6,954, தேங்காய் பருப்பு 5,694, தட்டைப்பயிறு 1,909 ரூபாய் என மொத்தமாக 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 140 மூட்டை மக்காச்சோளம், 15 மூட்டை கம்பு, 10 மூட்டை எள் ஆகிய விளைபொருட்கள் விற்பனைக்காக நேற்று கொண்டு வரப்பட்டன. சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,459 ரூபாய், எள் 7,802, கம்பு 2,292 ரூபாய்க்கு விலை போனது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு 25 விவசாயிகள் கொண்டு வந்த 165 மூட்டை விவசாய விளைபொருட்கள் 4 லட்சத்து 69 ஆயிரத்து 763 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.