கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., விஜய்பாபு தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவி தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 407 மனுக்கள் பெறப்பட்டது.மனுக்கள் மீது துறை ரீதியாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு துாய்மை பணிபுரிவோர் நலவாரியத்தின் நலவாரிய அட்டை துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.பின், முடக்குவாதம், பார்வை குறைபாடு, காதுகேளாதோர் மாற்றுத் திறனாளிளுக்கு சிறப்பு நாற்காலி, எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருவ பெருக்கி, பிரத்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், விஜயராகவன், ஹஜிதாபேகம், கலால் உதவி ஆணையர் ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ெஷர்லி ஏஞ்சலா பங்கேற்றனர்.