சார்பு நீதிமன்றத்திற்கு நடவடிக்கை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு| Dinamalar

சார்பு நீதிமன்றத்திற்கு நடவடிக்கை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு

Added : ஜூலை 05, 2022 | |
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைத்திட அரசாணை பெற்று தந்த அமைச்சருக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை வெயிடப்பட்டது.இதற்கு முயற்சி எடுத்த
சார்பு நீதிமன்றத்திற்கு நடவடிக்கை  அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு


திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைத்திட அரசாணை பெற்று தந்த அமைச்சருக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை வெயிடப்பட்டது.

இதற்கு முயற்சி எடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கவுரவிக்கும் நிகழ்ச்சி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் அன்பு வரவேற்றார். வழக்கறிஞர்கள் பொன் ராமதாஸ், அருணாசலம் முன்னிலை வைத்தனர்.அமைச்சர் பொன்முடி, சார்பு நீதிமன்றம் அமைக்க அரசாணை வழங்கிய முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், வெகு விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக உறுதி அளித்தார்.

திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர்கள் சிவக்குமார், ராஜேஷ், நிஜாம், டோனி விஜி, பழனியப்பன், முரளிதரன், சாரதி, மதி, செல்வமணி, கருணாகரன், அரசு வழக்கறிஞர் சங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X