சரிந்தது கொய்யா விலை; விவசாயிகள் கவலை

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
ஆயக்குடி : பழநி, ஆயக்குடி கொய்யா விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி சுற்றுப்பகுதிகளில் பனாரஸ், லக்னோ ,சிவப்பு கொய்யா பயிரிடப்பட்டு வருகிறது. இதற்காக பழநி, ஆயக்குடியில் கொய்யா சந்தையும் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர்,ஈரோடு, சேலம் என தமிழக மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சில

ஆயக்குடி : பழநி, ஆயக்குடி கொய்யா விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பழநி சுற்றுப்பகுதிகளில் பனாரஸ், லக்னோ ,சிவப்பு கொய்யா பயிரிடப்பட்டு வருகிறது. இதற்காக பழநி, ஆயக்குடியில் கொய்யா சந்தையும் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர்,ஈரோடு, சேலம் என தமிழக மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் 20 கிலோ கொய்யா பெட்டி ரூ. 1000 முதல் ரூ.1500 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.100 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது.

தகுந்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். ஆயக்குடி பகுதியில் பழங்கள் அதிகம் விளைவதால் சேமித்து வைத்து வைக்க குளிர்பதன கிடங்கு, பழச்சாறு தயாரிப்பு ஆலைஅமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. கொய்யா விவசாயி சுப்பிரமணி: 5 ஏக்கரில் கொய்யா விவசாயம் செய்கிறேன். விலை குறைவால் கொய்யா பறிக்கும் கூலி செலவுக்கு கூட விலை கிடைக்க வில்லை. எங்களது நிலையை கருத்தில் கொண்டு ஆயக்குடி பகுதியில் பழச்சாறு ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X