'பா.ஜ.வில் நோ இ.பி.எஸ்., ஒன்லி ஐ.பி.எஸ்.,'

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மதுரை : ''பா.ஜ.வில் இ.பி.எஸ்.க்கு முக்கியத்துவம் இல்லை; ஐ.பி.எஸ்.சுக்கு (அண்ணாமலை) தான் முக்கியத்துவம். அ.தி.மு.க.வில் யார் தலைவராக வர வேண்டும் என பா.ஜ. முடிவு செய்யாது'' என, அதன் மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மதுரையில் தெரிவித்தார்.பா.ஜ., கூட்டுறவு பிரிவு நுாறாவது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின விழா மதுரையில் நடந்தது. மாநில தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில செயலாளர்
BJP,OPS,IPS,Annamalai,Annamalai IPS, Panneerselvam, O Panneerselvam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : ''பா.ஜ.வில் இ.பி.எஸ்.க்கு முக்கியத்துவம் இல்லை; ஐ.பி.எஸ்.சுக்கு (அண்ணாமலை) தான் முக்கியத்துவம். அ.தி.மு.க.வில் யார் தலைவராக வர வேண்டும் என பா.ஜ. முடிவு செய்யாது'' என, அதன் மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மதுரையில் தெரிவித்தார்.

பா.ஜ., கூட்டுறவு பிரிவு நுாறாவது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின விழா மதுரையில் நடந்தது. மாநில தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், நிர்வாகிகள் பாஸ்கரன், கதலி ரசிங்க பெருமாள், எம்.எஸ்.ஷா, நகர தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பங்கேற்றனர்.

மாணிக்கம் பேசுகையில், ''கூட்டுறவு திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக தவறான செய்தியை பரப்புகின்றனர். விரைவில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் வரும்'' என்றார்.


latest tamil news



மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது: சட்டசபை தீர்மானங்கள் குறித்து ஆளுனர் விளக்கம் கேட்டு அளித்த எந்த நோட்டீசுக்கும் மாநில அரசு விளக்கம் அளிக்கவில்லை. பா.ஜ.,வில் இ.பி.எஸ்.சுக்கு முக்கியத்துவம் இல்லை. ஐ.பி.எஸ்.,சுக்கு தான் முக்கியத்துவம். பா.ஜ.,வை அண்ணாமலை திறம்பட வழிநடத்துகிறார். அ.தி.மு.க., எங்கள் கூட்டணி கட்சி. அங்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை பா.ஜ. முடிவு செய்ய முடியாது.

தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது. இங்கு நடக்கும் எல்லா தவறுகளுக்கும் முன்பாக தி.மு.க.,காரர்கள் இருப்பார்கள். எல்லாவற்றையும் திருடுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். திருடர்களை பிடிக்கவும், அரசுக்கு உதவவும் தயாராக உள்ளோம், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahehkumar11 - chennai,இந்தியா
05-ஜூலை-202214:08:42 IST Report Abuse
mahehkumar11 உங்க பொழப்பு தெரியாதா? கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைகிற மாதிரி நுழைந்து அப்புறம் அந்த கட்சியையே கவிழ்த்து விடுவீங்களே.
Rate this:
Cancel
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-202213:16:36 IST Report Abuse
Aruna Sure Welcome G
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
05-ஜூலை-202211:51:52 IST Report Abuse
Manguni அதெல்லாம் சரிதான் .. அது ஏன் பீஜிபி இல் மோசடி கும்பல் ரவுடி கும்பல் சேருவது அதிகரித்து வருகிறது.. இப்படி செய்தால் நம்ம ஆட்சி எப்படி வரும்? நீங்களே திருட்டு முன்னேற்ற கழகம் பேசுவதற்கு வாய்ப்பளிப்பீர்கள் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X