பணம் பறிப்பு வழக்கில் துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிராக இன்ஸ்பெக்டர் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
மதுரை : பணம் பறிப்பு வழக்கில் சிக்கிய மதுரை இன்ஸ்பெக்டர் வசந்திக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வசந்தி தாக்கல் செய்த மனு:போலி ரூபாய் நோட்டுக்களை சிலர் மாற்ற முயற்சிப்பதாக 2021 ஜூலை 5ல் தகவல் வந்தது. நாகமலை புதுக்கோட்டையில் ஒரு காரில் 2 பைகளை பறிமுதல்

மதுரை : பணம் பறிப்பு வழக்கில் சிக்கிய மதுரை இன்ஸ்பெக்டர் வசந்திக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வசந்தி தாக்கல் செய்த மனு:போலி ரூபாய் நோட்டுக்களை சிலர் மாற்ற முயற்சிப்பதாக 2021 ஜூலை 5ல் தகவல் வந்தது. நாகமலை புதுக்கோட்டையில் ஒரு காரில் 2 பைகளை பறிமுதல் செய்தேன். அதில் ஒன்றில் காகித ஆவணங்கள், மற்றொன்றில் ஆடைகள் இருந்தன. ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக எனக்கெதிராக அர்ஷத் என்பவர் பொய் புகார் செய்தார். ஜூலை 27ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். ஆக.,26ல் கைதானேன். அக்.,12ல் ஜாமினில் வெளியே வந்தேன்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்டது. அதை கிரிமினல் வழக்கு முடிவுக்கு வரும்வரை நிறுத்தி வைக்க கோரினேன். அதன் மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவசரகதியில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வசந்தி குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி: மனுதாரர் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X