போலந்து போல் கோவையில் வார்டுதோறும் 'மியாவாக்கி': பசுமையை குறைக்காத ஸ்மார்ட் சிட்டி!

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: கோவையில் பசுமை பரப்பை அதிகரிக்க, ஒவ்வொரு வார்டிலும் தலா ஓரிடத்தில், 'மியாவாக்கி' உருவாக்க, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாக, பசுமை பாதிக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம், முழுமையாக செயல்படுத்தப்படவுள்ளது.உலக நகர்ப்புற மன்றம் சார்பில், காலநிலை ஸ்மார்ட் சிட்டீஸ் தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான மாநாடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் பசுமை பரப்பை அதிகரிக்க, ஒவ்வொரு வார்டிலும் தலா ஓரிடத்தில், 'மியாவாக்கி' உருவாக்க, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாக, பசுமை பாதிக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம், முழுமையாக செயல்படுத்தப்படவுள்ளது.



latest tamil news




உலக நகர்ப்புற மன்றம் சார்பில், காலநிலை ஸ்மார்ட் சிட்டீஸ் தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான மாநாடு, போலந்து நாட்டில், கடொவைஸ் நகரில் கடந்த வாரம் நடந்தது. மாநாட்டில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கொச்சின் மேயர் மற்றும் புவனேஸ்வர் மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றனர்.

மாநாடு குறித்து, கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:
'ஸ்மார்ட் சிட்டி' உருவாக்கும்போது, பசுமை பரப்பு குறைந்து வருகிறது. ஐரோப்பிய நகரங்களில் பசுமை பரப்புக்கான இடத்தை, சமரசம் செய்து கொள்வதில்லை. நாம் கட்டடம் கட்டுகிறோம்; பசுமை பரப்புக்கு இடம் ஒதுக்காமல் இருக்கிறோம். அதனால், ஊரக பகுதிகளை காட்டிலும், நகர பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கிறது. அதை எப்படி குறைக்கலாம்; பசுமை பரப்பை எவ்வாறு அதிகரிக்கலாம். ஒரு நகரத்தை எப்படி உருவாக்க வேண்டும். என்னென்ன கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என விவாதம் செய்தோம்.


விரைவில் 'மியாவாக்கி' திட்டம்


'கிரீன் அண்டு கிளீன் சிட்டி' உருவாக்க வேண்டியது கட்டாயம். 100 வார்டுகளிலும், 'மியாவாக்கி' திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, 20 வார்டுகளில் துவக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆக., 15ல், 100 வார்டிலும், தலா ஒரு 'ரிசர்வ் சைட்'டில், 'மியாவாக்கி' உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

பொது பயன்பாட்டுக்கான கட்டடங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். சில இடங்களில் கட்டமைப்பு இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.அனைத்து வார்டுகளிலும், 15 நாட்களுக்கு முன் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்தது; 3 நாட்களுக்கு முன் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்தது என, 'சர்வே' எடுத்தோம்.
14 நாட்களுக்கு ஒருமுறை சப்ளையான 30 இடங்களில், 7-8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில், கால இடைவெளி குறைந்திருக்கிறது. கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில், 11 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது; இரு நாட்களே குறைந்திருக்கிறது.


latest tamil news





விரைவில் மாற்று ஏற்பாடு


ஒரே ஒரு இடத்தில் மட்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதால், மாற்று ஏற்பாடு மேற்கொள்ள இருக்கிறோம். கால இடைவெளியை குறைக்க, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.மழைக்காலம் துவங்கியிருப்பதால், கால்வாய் துார்வாருதல் மற்றும் பொத்தல் ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.
டெண்டர் முடிந்து விட்டது; பணிகளை விரைந்து துவக்க உத்தரவிட்டுள்ளோம். குப்பை அள்ள வாகனங்கள், தொட்டிகள், கடப்பாறை, மண்வெட்டி வாங்க ஆர்டர் கொடுத்து விட்டோம். இந்த வாரத்துக்குள் வந்து விடும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


'கோவைக்கு பெருமை'


மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மேலும் கூறுகையில், ''மத்திய அரசு சார்பில், நமது நாட்டில், 75 நகரங்களில் உள்ள சிறந்த இடங்கள் தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், கோவை வாலாங்குளம், உக்கடம் பெரிய குளம், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை ஆகியவற்றின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இது, கோவைக்கு மிகவும் பெருமை. இதுபோல், நிறைய இடங்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. போலந்து நாட்டில், பாரம்பரியமான கட்டடங்களை இன்றும் பராமரித்து வருகின்றனர். அதுபோல், நாமும் முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.


'குறிச்சிக்கு தனி குடிநீர் திட்டம்'


''குறிச்சியில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இருப்பதில்லை. 100வது வார்டில், குடிநீர் சப்ளையாகி 20வது நாட்களாகி விட்டது; மக்கள் ரோட்டுக்கு வரப்போகிறார்கள் என தகவல் வந்தது. பில்லுார், ஆழியாறில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சிறுவாணியில் இருந்து வழங்க வழிவகை இருந்தது. அதில், 3 டி.எம்.சி., தண்ணீர் வழங்கி, பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தினோம்.
குறிச்சி ஏரியாவில், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தனியாக திட்டம் தயாரிக்க வேண்டும். ஆழியாற்றில் தண்ணீர் எடுத்து, 'பம்ப்' செய்யும் இடத்தில், மின் தடை ஏற்பட்டால், 'ரிவர்ஸ்' ஆகி விடுகிறது. மீண்டும் 'பம்ப்' செய்வதற்கு, 4 மணி நேரமாகிறது. அங்கு, 24 மணி நேரமும் மின்சாரம் சப்ளை செய்ய முடியமா என, மின்வாரியத்துடன் ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
05-ஜூலை-202207:40:15 IST Report Abuse
vadivelu மியாவாக்கி என்றால் என்ன? அறியாமையால்தான் கேட்கிறேன்.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
05-ஜூலை-202208:13:42 IST Report Abuse
மணிபெரிய காட்டை அழித்துவிட்டு திருதிருன்னு முழிச்சிக்கிட்டிருக்கும் போது எதோ கிடைக்கிற பத்துக்கு பத்து சய்சில ஒரு பெரிய புதரை உண்டாக்கினாலும் அதுக்கு பெயர் மியாவ் வாக்கி....
Rate this:
05-ஜூலை-202209:39:08 IST Report Abuse
jagadeeshஅடர்வனம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X