ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.புளோரிடாவில் 2021ல் முற்றிலும் அழிக்கப்பட்ட ஆப்ரிக்க ராட்சத நத்தை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் அதிக அழிவை ஏற்படுத்தும் நத்தையாக உள்ளது. இது 500 விதமான தாவரங்களை உணவாக உட்கொள்கிறது. இதனால்
African land snails, snail, Florida Snail

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் 2021ல் முற்றிலும் அழிக்கப்பட்ட ஆப்ரிக்க ராட்சத நத்தை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் அதிக அழிவை ஏற்படுத்தும் நத்தையாக உள்ளது. இது 500 விதமான தாவரங்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவை எலி நுரையீரல் புழு ஓட்டுண்ணியை தன் உடலில் எடுத்துச்செல்கிறது. இது மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நத்தையை கண்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என புளோரிடா மாகாண அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்த ராட்சத நத்தை மண்ணில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதால் மண்ணின் தரம் குறைகிறது. சுற்றுச்சூழல் விவசாயம் மனிதர்கள் என இவற்றால் மூன்றுவகை அச்சுறுத்தல் உள்ளது. இவை ஆண்டுக்கு 1200 முட்டைகளை இனப்பெருக்கம் செய்கிறது. இது 20 செ.மீ. நீளம் 12 செ.மீ. விட்டம் வரை வளரும். பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி நத்தையின் இயக்கம் செரிமானத்தை குறைத்து அதை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
05-ஜூலை-202211:38:21 IST Report Abuse
Anand அங்கு சீனாக்காரன் எவனும் இல்லையா?
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
05-ஜூலை-202211:22:01 IST Report Abuse
KavikumarRam இது ஒரு மிகச்சிறந்த ப்ரொட்டீன் உணவுன்னு மட்டும் சொல்லிப்பாருங்க, அமெரிக்காக்காரன் பர்கர், பீசா, கிரில் ன்னு ஒரே மாசத்துல சோலிய முடிச்சிருவாப்ல.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-ஜூலை-202211:13:02 IST Report Abuse
raja திருட்டு திராவிட மாடல் ஆட்சியில சிலபேரு ஆமை கரி நத்தை கறியெல்லாம் சாப்பிடுவானுவோ... அனுப்பி வச்சா ஒரே நாளில் நத்தைகள் சோழிய முடிச்சிடுவானுவோ......
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
05-ஜூலை-202213:12:01 IST Report Abuse
பெரிய ராசு மூர்க்கணுக்களை சொல்லுறீங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X