வெளிமாநில கோயில்களுக்கு மீனாட்சி அம்மன் கோயில் பட்டு வஸ்திரம்!

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : உ.பி., காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்துார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் கோயில், கர்நாடகா முருதீஸ்வரா கோயில் உட்பட வெளிமாநில கோயில் திருவிழாக்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியன்று
Meenakshi Amman, Madurai, Temple, Meenakshi Amman Temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : உ.பி., காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்துார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் கோயில், கர்நாடகா முருதீஸ்வரா கோயில் உட்பட வெளிமாநில கோயில் திருவிழாக்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் மாலை அனுப்பப்படுகிறது. பாரம்பரியமாக நடந்து வரும் இந்நிகழ்வை போன்று, வருங்காலத்தில் வெளிமாநில கோயில்களுடன் நல்லுறவு ஏற்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.


latest tamil news



இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் காசி, காளஹஸ்தி, திருச்சூர் கோயில்களுக்கு பட்டு வஸ்திரம் வழங்கவும், அதற்கு பதிலாக அந்த கோயில்கள் சார்பில் பட்டு வஸ்திரம், மாலை வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதற்கட்டமாக காளஹஸ்தி, திருச்சூர் கோயில் நிர்வாகத்திடம் மீனாட்சி கோயில் நிர்வாகிகள் பேசி உள்ளனர்.

அதேபோல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், குருவாயூர் கோயில் உட்பட வெளிமாநில கோயில்களுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மாலை அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் வெளிமாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்படும் என அறநிலையத்துறை கருதுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
05-ஜூலை-202216:11:38 IST Report Abuse
Hari சேகர் பாபு என்ன இந்துக்களின் ஜமீன்தாரா என்ன செய்தி உத்தரவிடடாராம் உத்தரவு ,அறநிலையத்துறையை இப்போதே கோவிலில் இருந்து விரட்டி அடிக்கணும்.
Rate this:
Cancel
South Indian - Dublin,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202214:02:55 IST Report Abuse
South Indian கேரளவைபோல் வெடி வழிபாடு மற்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் வெடி வெடித்தால் சிவகாசி தொழிலுக்கு ஆதரவு கிடைக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-ஜூலை-202213:14:28 IST Report Abuse
Ramesh Sargam சிறப்பான செயல். மதத்தால் நாட்டை இணைப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X