சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'பிரெய்லி' வழிகாட்டி அமைப்பு

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
சென்னை: சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களுக்கு வரும் பார்வை குறைபாடு உள்ள பயணியர், நுழைவு வாயிலில் இருந்து, 'பிரெய்லி' வரைபடங்கள் வாயிலாக நிலையத்துக்குள் செல்வதற்கு வழிகாட்டும் வசதி நேற்று துவங்கப்பட்டது.சென்னை ரயில்வே கோட்டத்தில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், பார்வை குறைபாடு உள்ள பயணியருக்கு உதவும் வகையில், நிலைய நுழைவு வாயிலில், ௩ அடி அகலம், ௩

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களுக்கு வரும் பார்வை குறைபாடு உள்ள பயணியர், நுழைவு வாயிலில் இருந்து, 'பிரெய்லி' வரைபடங்கள் வாயிலாக நிலையத்துக்குள் செல்வதற்கு வழிகாட்டும் வசதி நேற்று துவங்கப்பட்டது.

சென்னை ரயில்வே கோட்டத்தில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், பார்வை குறைபாடு உள்ள பயணியருக்கு உதவும் வகையில், நிலைய நுழைவு வாயிலில், ௩ அடி அகலம், ௩ அடி நீளத்தில், 'பிரெய்லி' வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக நிலையத்தில் உள்ள வசதிகள், பயணியர் போக விரும்பும் டிக்கெட் கவுன்டர்கள், நடை மேடைகள், பாதசாரி பாலங்கள் மற்றும், நிலையத்தில் உள்ள பிற வசதிகள் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.



latest tamil news




இந்த 'பிரெய்லி 'வரை படத்தில் உள்ள, 'க்யூ ஆர்' குறியீட்டை, மொபைல் போனில் 'ஸ்கேன்' செய்து, தகவல்களை ஒலிக்கச் செய்து, நிலையத்திற்குள் போக விரும்பும் இடத்தின் வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற, நடை மேடைகளின் ஓரத்தில், கைத்தடியால் தொட்டுணரும் படியான நவீன ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
பார்வை குறைபாடு உள்ள பயணியரின் பாதுகாப்புக்காக, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதசாரி பாலங்கள் முழுவதும், படிக்கட்டுகளில் பிரெய்லி பொறிக்கப்பட்டுள்ள துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் உட்பட முக்கிய நிலையங்களிலும், 'பிரெய்லி' வரைபடங்கள் அமைக்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X