பா.ஜ., இன்று உண்ணாவிரதம்| Dinamalar

பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் தரப்படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் தரப்படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அக்கட்சி ஆட்சியை பிடித்து ஓராண்டிற்கு மேலாகியும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

அதன்படி, இன்று அக்கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை வரை, பா.ஜ.,வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடக்கும் போராட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X