தொடர்ந்து ஜாமின் மனு செய்வது ஏற்புடையதல்ல: உயர் நீதிமன்றம்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை-'சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மீண்டும், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு செய்வது ஏற்புடையதல்ல. கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவர் மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை-'சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மீண்டும், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு செய்வது ஏற்புடையதல்ல. கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.



latest tamil news


துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்சை, சாத்தான்குளம் போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர்.இது தொடர்பாக, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்குப் பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.உயர் நீதிமன்றக் கிளையில், ஸ்ரீதர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'இதுவரை 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


தற்போதைய நிலையில் ஜாமின் அனுமதித்தால் விசாரணை பாதிக்கும்' என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் மீண்டும், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு செய்வது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
05-ஜூலை-202219:10:43 IST Report Abuse
அன்பு ஜாமீன் கொடுப்பதற்கு பதில், மரணதண்டனை கொடுங்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-ஜூலை-202217:03:37 IST Report Abuse
Girija ஜாமீன் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று சொல்லிவிட்டு கீழமை கோர்ட்டுகளில் எதற்கு முறையீடு செய்ய சொல்ல வேண்டும்? கிரேசி பாய்ஸ் இன்வெஸ்டிகஷன் (சிபிஐ) இந்திராணி முகர்ஜி கேஸ் போல இதையும் சொதப்பிவிடும் போல் உள்ளது. இதை அறிந்துதான் சிவகங்கை சீமான் இருப்தைஐந்து முறை பெயில் பெற்று வெளியே ராஜ்ய சபா எம் பி ஆகா வேறு உள்ளார். எந்த சிபிஐ அதிகாரி தைரியமாக அவரை நெருக்க முடியும்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
05-ஜூலை-202216:38:00 IST Report Abuse
Suppan அது சரி இங்கு சிலருக்கு 25 வது முறையாக ஜாமீன் கொடுத்து அவர் அதைக் கொண்டாடி உள்ளாராமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X