முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 ஆகிய பதவிகளில், 2,207 காலியிடங்களை நிரப்புவதற்கான, கணினி வழி போட்டி தேர்வு, இந்த ஆண்டு பிப்., 12 முதல் 20 வரை நடந்தது. தேர்வில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
trb, exam, result

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 ஆகிய பதவிகளில், 2,207 காலியிடங்களை நிரப்புவதற்கான, கணினி வழி போட்டி தேர்வு, இந்த ஆண்டு பிப்., 12 முதல் 20 வரை நடந்தது. தேர்வில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் உத்தேச விடைக் குறிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டன. மொத்தம், 29 ஆயிரத்து 141 பேர், விடைக் குறிப்புகளில் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அவற்றை, பாட வல்லுனர்கள் வழியே ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ள விடைக் குறிப்புகளை மட்டும் டி.ஆர்.பி., இறுதி செய்தது.இதையடுத்து, ஒவ்வொரு பாட வாரியாக திருத்தப்பட்ட விடைக் குறிப்புகள், தேர்வர்களின் மதிப்பெண் விபரம் மற்றும் ஆட்சேபனை கருத்துகளின் நிலை ஆகியவற்றை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X