'பத்து சதவீதம் பேருக்கு அறிகுறிகளற்ற கொரோனா'

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கோவை: 'கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்படும், 80 சதவீத நபர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை' என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவையில் கடந்த ஒரு வாரங்களாக கொரோனா பாதிப்பு, 100க்கும் மேல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில், பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் கொரோனா

கோவை: 'கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்படும், 80 சதவீத நபர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை' என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு வாரங்களாக கொரோனா பாதிப்பு, 100க்கும் மேல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில், பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு, தடுப்பூசி செலுத்த நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துதல், கொரோனா குறித்து விழிப்புணர்வு போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவையில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களில், 80 சதவீதம் பேருக்கு மேல் சிறிய அளவிலான பாதிப்பே ஏற்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news




இது குறித்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவையில் கடந்த சில தினங்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில், 80 சதவீதம் பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பும், 10 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் அற்ற பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X