சரஸ்வதி மகால் நூலகத்தில் திருட்டு? ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
தஞ்சாவூர் : சரஸ்வதி மகால் நுாலகத்தில், பழமையான நுால்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த தமிழ், தெலுங்கு ஏட்டுச்சுவடிகள், நாயக்கர் காலத்தில் சேகரிக்கப்பட்டு, 'சரஸ்வதி பண்டாரகம்' என்ற நுாலகம் உருவாக்கப்பட்டது.பிறகு மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நுால்களும்,
சரஸ்வதி மகால்,  நூலகம்,  திருட்டு, ஆய்வு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர் : சரஸ்வதி மகால் நுாலகத்தில், பழமையான நுால்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த தமிழ், தெலுங்கு ஏட்டுச்சுவடிகள், நாயக்கர் காலத்தில் சேகரிக்கப்பட்டு, 'சரஸ்வதி பண்டாரகம்' என்ற நுாலகம் உருவாக்கப்பட்டது.

பிறகு மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நுால்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு, சரஸ்வதி மகால் நுாலகமாக மாறியது. இந்த நுாலகத்தில், 30 ஆயிரத்து, 433 ஓலைச்சுவடிகளும், 6,426 புத்தகங்களும் உள்ளன.


latest tamil news
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, நுாலகத்தை பராமரித்து வருகிறது.சி.இ.ஓ., பொறுப்பில் உள்ளவர்களை, நுாலகத்திற்கு நிர்வாக அலுவலராக நியமிப்பதால், அவர்கள் முறையாக பணியாற்ற முடியாத சூழலில், சரஸ்வதி மகால் நுாலகம் சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், சீகன் பால்க் என்பவர் பைபிளின் 'புதிய அத்தியாயத்தை' தமிழில் 1715ம் ஆண்டு மொழி பெயர்த்தார்.

அது, சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டதால், பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அது திருடப்பட்டதாக கூறப்படுகிறது.அது போன்ற பழமையான அரிய பல நுால்கள் மாயமாகி இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, மக்கள் நல பேரவை செயலர் ஜீவக்குமார் கூறியதாவது:


latest tamil news
ஆங்கிலேயேர் காலத்தில், பர்னல் என்பவரால், 'ஆக்கம் பெற்ற நுால் பட்டியல்' என்ற ஆவணம் தயாரிக்கப்பட்டு, நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.அதை ஒப்பிட்டு பார்த்தால், பைபிள் போல வேறு எந்த நுால்களும் திருடப்பட்டுள்ளதா என்ற விவரத்தை எளிதில் அறியலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-202215:47:40 IST Report Abuse
SUBBU,MADURAI திமுககாரனுக இதெல்லாம்செஞ்சிருக்க வாய்ப்பில்லை. அவிங்களுக்கும் புஸ்தகத்தும் என்ன சம்பந்தம்.அதனால பாவம் அவிங்கள இந்த விஷயத்துல சந்தேகப்பட கூடாது.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-ஜூலை-202213:54:11 IST Report Abuse
J. G. Muthuraj 1909 ஆம் ஆண்டில் 310 பக்கங்கள் கொண்ட பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள தமிழ் நூற்கள் பட்டியல் I. D. BARNETT / G. U. POPE அவர்களால் தயார்செய்யப்பட்து நூலாக வெளிவந்தது.....1865 ஆம் ஆண்டில் ஜான் முர்டாக் என்பவரால் தமிழ் நூல்கள் பட்டியல் (416 பக்கங்கள்) தொகுக்கப்பட்டு வெளியாயின....இவைகள் தமிழ் பொக்கிஷம்....இதிலுள்ள நூல்களையெல்லாம் தேடிப்பிடித்து ஆய்வு செய்தால் தமிழின் பெருமை உயரும்....கீழடி ஆய்வுக்கு கொடுக்கப்படும் கவனத்தில்/தொகையில் 10 சதவிகிதம் இப்பணிக்கு கொடுத்தால் போதுமானது....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-ஜூலை-202213:35:11 IST Report Abuse
J. G. Muthuraj இச்செய்திக்கு தினமலருக்கு நன்றி....ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு விவிலிய பிரதியைப்பற்றிய கட்டுரைக்கு எனது அனுபவ கருத்துக்களை எழுதியிருந்தேன்... அது பிரசுரிக்கப் படவில்லை.. 1983 ஆம் ஆண்டில் 10 ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள் /ஆவணக் கிடங்குகளை விசிட் செய்து குறிப்பாக கிறிஸ்தவ இலக்கியங்களின் நூல் பாட்டியல் ஒன்றை தயாரித்து அது நூலாக 1985 ல் வெளிவந்தது (105 பக்.). இந்தியாவில் உள்ள நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் நூல்கள், சில ஓலை சுவடிகளையும் சேர்த்து பட்டியலிட்டு தனி பிரதியாக (200 பக்.) அச்சுக்கு தயார் ஆனது.. ஆனால் அச்சில் வெளிவரவில்லை.. தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பட்டியலிட்டு வெளியிடுவதில் பல தடைகள் உள்ளன.. போட்டிகள், தொழில் பொறாமைகள், அரசியல் இவைகளைத்தாண்டி வரவேண்டும்.. ஜாதி, மத பிற மாநில மொழிகள் அடிப்படையில் நூல்கள் சேதப்படுத்தப்படுகின்றன.. சில அழிக்கப்படுகின்றன.. நன்கு பயிற்சி பெற்ற ஆவண எக்ஸ்பர்ட் ARCHIVIST தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை.. 1715 ஆம் ஆண்டின் விவிலிய பிரதி அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அது ஐரோப்பாவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.. ஐரோப்பிய நூலகங்களில் நல்ல வசதிகள் இருக்கின்றன.. அங்குள்ள சீதோஷ்ணநிலையில் ஆவணங்கள் நீண்ட காலம் பத்திரமாக இருக்கும்.. தற்போது புகழ்வாய்ந்த தமிழ் அறிஞர்களோடு சேர்ந்து திட்டங்கள் தீட்டினோம்.. பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை...அதாவது ஐரோப்பாவில் உள்ள அறிய நூல்களை சுவடிகளை போட்டோ பிரதி எடுத்து ஆராய்ச்சிக்கு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று.. அதற்கு ஊக்கமும் இல்லை...பணமும் இல்லை.. தினமலர் அறிஞர்கள் தமிழ் நூல்களை தேடி பட்டியலிடும் பணிக்கு நல்லதிட்டங்களை வகுத்து, பிரபலப்படுத்தி, அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்....ஆராய்ச்சிக்கு மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும்....அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள்...முழக்கமிடுகிறார்கள்...செயல் குறைவு...இன்றுவரை ஏமாற்றமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X