ரூ. 200 கள்ள நோட்டு புழக்கம் சேலம் கும்பலால் அலறல்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சேலம் : சேலத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுக்களில், 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை கும்பல் புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் அலறுகின்றனர்.மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.ஆனால், கள்ள நோட்டு கும்பல்,
 ரூ. 200 கள்ள நோட்டு புழக்கம் சேலம் கும்பலால் அலறல்

சேலம் : சேலத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுக்களில், 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை கும்பல் புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் அலறுகின்றனர்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.ஆனால், கள்ள நோட்டு கும்பல், புதிய ரூபாய் நோட்டுக்களை போன்ற கள்ள நோட்டுகளை வடிவமைத்து புழக்கத்துக்கு விடுகின்றனர். தற்போது, 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் கும்பல் விடுகிறது.

குறிப்பாக வார்ச்சந்தைகள், உழவர்சந்தைகள், காய்கறி, கறி, மீன் மார்க்கெட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.கள்ள நோட்டுக்களை பெறும் வியாபாரிகள் அதை வங்கியில் செலுத்தும் போது, அவை கள்ள நோட்டு என்பது தெரிய வருகிறது. அப்போது இழப்பை சந்திப்பதோடு, அதிர்ச்சியும் அடைந்து வருகின்றனர்.இதனால், 200 ரூபாய் நோட்டுக்களை கண்டு, சிறிய, நடுத்தர வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் அலறுகின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கும்பல் தற்போது, 200 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருகிறது. இந்த கும்பல் சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளது. வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். போலீசார் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
05-ஜூலை-202211:58:07 IST Report Abuse
Sidhaarth ஜி ஆட்சியில் கள்ளநோட்டு எல்லாத்தயும் ஜி எப்போவோ ஒழித்து விட்டாரே
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
05-ஜூலை-202218:26:33 IST Report Abuse
Pandi Muniவிடியல் ஆணிகளை அப்புறப்படுத்திக்கிறதோ?...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஜூலை-202210:56:37 IST Report Abuse
Natarajan Ramanathan சேலம் கிச்சிப்பாளையம் இசுலாமியர்கள் ஏரியாவா?
Rate this:
raja - Cotonou,பெனின்
05-ஜூலை-202214:08:45 IST Report Abuse
rajaஅதே....கண்டுபிடிச்சுடீங்களே........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X