பா.ஜ., உண்ணாவிரத போராட்டம்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் தரப்படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
பா.ஜ., உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் தரப்படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அக்கட்சி ஆட்சியை பிடித்து ஓராண்டிற்கு மேலாகியும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

அதன்படி, இன்று அக்கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை வரை, பா.ஜ.,வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடக்கும் போராட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். திருச்சியில் நடந்த போராட்டத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202207:22:21 IST Report Abuse
Nithila Vazhuthi மாபெரும் உணவு பஞ்சம் தவிர்க்கப்பட்டது நாட்டுக்கு நல்லதுதானே?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
06-ஜூலை-202202:35:42 IST Report Abuse
BASKAR TETCHANA அப்பனுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ய பணம் இருக்கு ஆனால் சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கு இல்லை. உங்களுக்கு எல்லாம் ஏண் வெள்ளை வெட்டி எதற்கு.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-ஜூலை-202217:05:26 IST Report Abuse
Rafi காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த விலைக்கும் இப்போதுள்ள விலைக்கும் மலைக்கும்,மடுவுக்கும் இருப்பது போல் ஆக்க யார் காரணமானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு எதிராக போராடுவதே ஏற்புடையதாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X