அதிமுக பொதுச்செயலராக பழனிசாமி?: வெளியானது பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள்!

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக பழனிசாமி தரப்பினர் தெரிவித்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பொதுக்குழுவில் பொதுச்
ADMK, General Committee, General Secretary, EPS, Palanisamy, அதிமுக, பொதுக்குழு, பொதுச்செயலாளர், தீர்மானங்கள், பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக பழனிசாமி தரப்பினர் தெரிவித்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதிக்கப்படுவதாகவும், அதற்கான தேர்தல் அறிவிப்பு செய்ய உள்ளதாகவும், அதுவரை இடைக்கால பொதுச் செயலர் பொறுப்பு உருவாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 2021ம் ஆண்டு டிசம்பர் 1ல் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் இயற்றப்பட்ட, சட்ட திட்டத் திருத்தங்கள், ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி பேர் உடனடியாக கூட்டுமாறு விண்ணப்பித்ததின் அடிப்படையில் வரும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டப்படுகிறது.


latest tamil newsபொதுக்குழு கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தீர்மானங்கள்:
1. அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
2. அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு ‛பாரத ரத்னா' விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.
3. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.
4. இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.
5. இடைக்கால பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.


latest tamil news


6. பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.
7. அதிமுக.,வின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் சம்பந்தமாக.
8. எம்.ஜி.ஆர் வழியில், ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செயல்பட்ட வரலாற்று வெற்றிகளும்.
9. அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும், திமுக அரசுக்கு கண்டனம்.
10. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.

11. சட்டம், ஒழுங்கை பேணி காக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
12. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.
13. இலங்கை தமிழர் நலன் காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
14. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
15. நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.

ஓபிஎஸ் மனு


11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும், ஆனால் நேற்று (ஜூலை 4) மாலைதான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக கூறி ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
07-ஜூலை-202208:06:52 IST Report Abuse
ravi தலைகீழே நின்னு தண்ணி குடிச்சாலும் எடப்பாடி பொதுச்செயலாளராக முடியாது. கொள்ளையடித்த பணத்தில் மீண்டும் மீண்டும் பொதுக்குழுவை அஞ்சுப்பைசா லாபம் இருக்காது. சட்டமும் தெரியவில்லை. ஒரு இங்கிதமும் தெரியவில்லை.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
06-ஜூலை-202207:46:57 IST Report Abuse
ravi எடப்பாடி பதவி வெறி பிடிச்சவர். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
06-ஜூலை-202207:46:10 IST Report Abuse
ravi OPS-தமிழ்நாட்டு மன்மோகன்சிங்-முன்னேற்றமில்லாத இந்தியா EPS-தென்னகத்து சோனியா-திமுகவை மிஞ்சும் ஊழல் இந்தியா IPS-முன்னேற்றம் தரும் எதிர்கால இந்தியா. IPS ஆட்சிக்கு வரட்டுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X