ராகுல் வீடியோவை தவறாக சித்தரித்த செய்தியாளர் கைது

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
காசியாபாத்: கேரளாவின் வயநாட்டில் தன் அலுவலகம் சூறையாடியது பற்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசிய வீடியோவை தவறாக சித்தரித்து பேசிய தனியார் டிவி செய்தியாளரை கைது செய்வதில் உ.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. உ.பி,யின் காசியாபாத் போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை தெரிவிக்க போலீசார்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

காசியாபாத்: கேரளாவின் வயநாட்டில் தன் அலுவலகம் சூறையாடியது பற்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசிய வீடியோவை தவறாக சித்தரித்து பேசிய தனியார் டிவி செய்தியாளரை கைது செய்வதில் உ.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. உ.பி,யின் காசியாபாத் போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

கேரளாவின் வயநாட்டில் தன் அலுவலகம் சூறையாடப்பட்டது பற்றி ராகுல் பேசிய பேச்சின் வீடியோ பதிவை, ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புப்படுத்தி டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல தலைவர்கள் அதனை வெளியிட்டு ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த வீடியோ பொய் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அந்த வீடியோவை நீக்கினர். இதற்கு அந்த டிவி நிறுவனம் மன்னிப்பு கோரியது. இருப்பினும், இந்த வீடியோ வெளியிட்டதற்கு எதிராக அந்த நிறுவனம் வாசலில் காங்கிரசார் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

ராகுல் குறித்து அவதூறு பேசியதாக ரோகித் ரஞ்சன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக அவரை கைது செய்வதற்கு சத்தீஸ்கரின் ராய்ப்பூர் போலீசார், உ.பி.,யின் காசியாபத்தின் இந்திரபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் போலீசார் என்னை கைது செய்வதற்கு வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். இது சட்ட விரோதம் எனக்கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராய்ப்பூர் போலீசார், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டமல்ல. இருப்பினும் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டை போலீசார் காட்டுவார்கள். போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையில் இணைந்து, உங்களது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.


latest tamil newsஉ.பி.,யின் காசியாபாத் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் உள்ளூர் போலீசாரின் கவனத்தில் உள்ளது. இந்திராபுரம் போலீஸ் ஸ்டேசனும் அருகில் உள்ளது. சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தனர்.

இதனிடையே, ரோகித் ரஞ்சனை, சத்தீஸ்கர் போலீசார் கைது செய்வதை தடுக்கும் போருட்டு, காசியாபாத் போலீசார், அவரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அழைத்து சென்றனர். தற்போது, அவர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை தெரிவிக்காத காசியாபாத் போலீசார், அவர் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
05-ஜூலை-202217:06:50 IST Report Abuse
abdulrahim இவன் பெயர் ஜுபைர் என இருந்திருந்தால் இந்நேரம் உபி அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்கும் ஆனால் இவன் பெயர் ரோஹித் அல்லவா சத்தீஸ்கர் போலீஸ் கைது செய்ய வரும் வரை யோகியின் உபி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதிலிருந்தே தெரிகிறது இவனை இதுபோல வீடியோ மார்பிங் செய்ய சொன்னதே பாஜக ரவுடிகள் தான் என்பது , கடைசியில் இவனை சத்தீஸ்கர் போலீசிடம் இருந்து காப்பாற்றி எங்கோ ராஜா மரியாதையோடு வைத்திருக்கிறார்கள் , இல்லாததை பொய்யாக ஒளிபரப்பிய இவனை பாதுகாக்கிறது மோடி அரசு ஆனால் நூபுர் சர்மா பேசியதை வெளியிட்டதற்க்காக பத்திரிகையாளர் ஜுபைர் கைது செய்யப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது இதுதான் மோடி அரசின் சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு.
Rate this:
05-ஜூலை-202220:57:26 IST Report Abuse
பொய் தமிழ் கலாச்சாரம் அல்லஇன்னமும் ஜுபைர் செய்தது தவறு என்பது கூட உணராத ஒரு பிறப்பு ,...
Rate this:
05-ஜூலை-202220:58:15 IST Report Abuse
பொய் தமிழ் கலாச்சாரம் அல்லராஜஸ்தானில் கன்னையா லாளை கொன்ற இரண்டு காட்டுமிராண்டிகளை ஜுபைர் போன்றவர்கள் கொண்டாடுவார்கள்...
Rate this:
Desi - Chennai,இந்தியா
05-ஜூலை-202222:23:31 IST Report Abuse
Desiஇங்கே ஊரோடு ஒத்து வாழ கஷ்டமாக, பிரதமரை பிடிக்காமல் இருந்தால் உங்களுக்காக ஜின்னாஹ் கேட்டு வாங்கிய நாடுகளுக்கு போகலாமே....
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-202200:23:19 IST Report Abuse
Fastrackரோஹித் சர்தானா ..திறமை வாய்ந்த டீவி விவாதங்கள் நடத்தியவர் ..40 வயதிலேயே கொரோனாவிற்கு பலியாகி விட்டார் ......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202216:52:59 IST Report Abuse
J.V. Iyer பொய்யரின் மீது பொய் பேசியதால் கைதா? அப்ப, அவர் பேசியது உண்மைதானே?
Rate this:
Cancel
05-ஜூலை-202214:44:02 IST Report Abuse
ஆரூர் ரங் இது வரை ராகுல் கூறியுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு வழக்குப் போட்டால் ஆயுள் முழுவதும்😇 ஜெயிலில்தான் இருக்க வேண்டியிருக்கும். பொய் சொல்லுவதில் பாட்டியின் வழி. RSS பற்றி அவதூறு பரப்பியதற்காக ஆறாண்டுகளாக வாய்தா வாங்கி கொண்டிருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X