சிவசேனாவை பணத்தால் யாரும் விலைக்கு வாங்க முடியாது: சஞ்சய் ராவத்| Dinamalar

சிவசேனாவை பணத்தால் யாரும் விலைக்கு வாங்க முடியாது: சஞ்சய் ராவத்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (24) | |
மும்பை: சிவசேனா பால் தாக்கரேவுக்கு சொந்தமானது, வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது என்றும், பணத்தின் மூலம் கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது எனவும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அரசுக்கு எதிராக சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியதுடன், அசாமில் தஞ்சம் அடைந்தனர். பிறகு ஏக்நாத் ஷிண்டே
Shiv Sena, Hijack, Money, Rebel MLAs, Sanjay Raut, சிவசேனா, சஞ்சய் ராவத், கட்சி, கடத்தல், அதிருப்தி எம்எல்ஏ, பணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: சிவசேனா பால் தாக்கரேவுக்கு சொந்தமானது, வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது என்றும், பணத்தின் மூலம் கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது எனவும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அரசுக்கு எதிராக சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியதுடன், அசாமில் தஞ்சம் அடைந்தனர். பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தற்போது ஆட்சி அமைத்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். நேற்று (ஜூலை 4) நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஷிண்டே தலைமையிலான மஹா., அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவசேனா 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளோம். இடைத்தேர்தல் வரட்டும், யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது எல்லாம் தெளிவாகும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். சிவசேனா பால் தாக்கரேவுக்கு சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது. பணத்தின் மூலம் கட்சியை விலைக்கு வாங்க முடியாது.


latest tamil news


பணம் மட்டுமல்லாது வேறு ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த 'ஏதாவது' வெளிப்படும் போது தெரியவரும். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X