ஐந்தாவது டெஸ்டில் இந்தியா தோல்வி: சமன் ஆனது டெஸ்ட் தொடர்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களை 'சேஸ்' செய்து சாதனை படைத்தது.இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட
INDVSENG,cricket, india, england

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களை 'சேஸ்' செய்து சாதனை படைத்தது.

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், பர்மிங்காமில் நடந்தது.


latest tamil news


முதல் இன்னிங்சில் இந்தியா 416, இங்கிலாந்து 284 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன் எடுத்தது. பின் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்து, 119 ரன் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (72), ஜோ ரூட் (76) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news
மீண்டும் ஏமாற்றம்


இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் சதம் விளாசினர். இவர்களை பிரிக்க இந்திய அணி கேப்டன் பும்ரா எடுத்த எந்த முயற்சிக்கும் கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை. இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 378 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-202220:02:18 IST Report Abuse
Venugopal S இந்தப் போட்டியில் இந்தியா ஆரம்பம் முதலே அகம்பாவம் மற்றும் ஆணவத்துடன் நடந்தனர். மேலும் எதிரணியை மட்டமாக நினைத்து ஆடினர்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202219:58:56 IST Report Abuse
Kalyan Singapore 387 ஒரு சவாலான இலக்கு தான் அதுவும் 4 ஆவது இன்னிங்சில் . அனால் அவுட் ஆக்க பந்து வீச்சாளர்கள் தான் இல்லை . முந்தைய இங்கிலாந்து கேப்டன் மைகேல் வாகன் அவர்களே அஸ்வின் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஆச்சர்யம் தெரிவித்திருந்தார் பற்கள் போன சிங்கத்தை வேட்டைக்கு அழைத்துச்சென்றால் அது என்ன செய்யும் ?
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
05-ஜூலை-202219:11:47 IST Report Abuse
Narasimhan அஸ்வின் நடராஜன் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இந்த பி சி சி ஐ வேண்டுமென்றே தமிழக வீரர்களை ஒதுக்குகின்றனர். இரண்டு வருடமாக கோஹ்லி சரியாக விளையாடாத போதிலும் அணியில் இடம் பெறுகிறார். இதிலும் அரசியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X