நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை பாயும்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
பொன்னேரி:நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த பாதைகளை வருவாய்த் துறையினர் அகற்றியதுடன், மீண்டும் ஆக்கிரமித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்து உள்ளனர்.பொன்னேரி வட்டத்தில், ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.மூன்று மாதங்களில் நீர்நிலைகளில்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை பாயும்

பொன்னேரி:நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த பாதைகளை வருவாய்த் துறையினர் அகற்றியதுடன், மீண்டும் ஆக்கிரமித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்து உள்ளனர்.
பொன்னேரி வட்டத்தில், ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.மூன்று மாதங்களில் நீர்நிலைகளில் இருந்த, 74 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.நேற்றும், ஆக்கிரமிப்புஅகற்றும் பணிகள் நடந்தன.
பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் பகுதியில், நீர்நிலை புறம்போக்கு நிலத்தைதனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து பாதை அமைத்திருந்தனர்.பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், வருவாய்த் துறையினர் மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு, பாதைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, 1 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு, நீர்நிலைகளின் எல்லைகளை அளவீடு செய்து கற்கள் பதிக்கப்பட்டன.
இது குறித்து பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது:பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றி வருகிறோம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யக்கூடாது.தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் ஆக்கிரமித்தால், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது குறித்து, 94450 00490 என்ற மொபைல் போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் வரும் பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X