ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்உடைந்த குழாய்களால் வீணாகும் குடிநீர்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள தெருக் குழாய்களில், உடைந்த குழாய்களால் குடிநீர் வீணாகிறது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 180க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, அங்கிருந்து ஐந்து மேல்நிலை
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்உடைந்த குழாய்களால் வீணாகும் குடிநீர்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள தெருக் குழாய்களில், உடைந்த குழாய்களால் குடிநீர் வீணாகிறது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 180க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, அங்கிருந்து ஐந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், குழாய் வாயிலாக தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் குழாய் இணைப்பு வேண்டுவோர், பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பத்தில் அரசு தெரிவித்த நெறிமுறைகளுடன் பணம் செலுத்தி, இணைப்பு பெறுகின்றனர்.இணைப்பு இல்லாதவர்கள் தெருக்களில் அமைத்துள்ள குடிநீர் குழாய் வாயிலாக தண்ணீர் பெறுகின்றனர். பெரும்பாலான தெருக்களில் பொதுமக்கள் நலனுக்காக, பேரூராட்சி நிர்வாகம் இலவச தெருக் குழாய்களை அமைத்து உள்ளது.
குழாய்கள் உடைந்தாலும், பேரூராட்சி நிர்வாகம் புதிதாக குழாய் அமைக்கிறது.சில இடங்களில், தெருக் குழாய்கள் உடைந்தாலும், பொதுமக்களும் மாற்றுவதில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிப்பதில்லை.இதனால், போலீஸ் நிலைய குடியிருப்பு, திருவள்ளூர் சாலை ஆகிய இடங்களில் உடைந்த தெருக் குழாய்களில் இருந்து குடிநீர் வீணாகிறது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரி விளக்கம்
இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சேதமடைந்த குழாய்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறோம்.நாங்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த தெருக்குழாய்களை சீரமைத்து வருகிறோம்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X