புதுச்சத்திரத்தில் இலவச ஆடுகள் கேட்டுஎம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட பயனாளிகள்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் பகுதியில், இலவச ஆடுகள் வழங்கும் விழாவில், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டரை, பயனாளிகள் முற்றுகையிட்டனர்.வெள்ளவேடு அடுத்த, புதுச்சத்திரம் பகுதியில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், இலவச ஆடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
புதுச்சத்திரத்தில் இலவச ஆடுகள் கேட்டுஎம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட பயனாளிகள்

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் பகுதியில், இலவச ஆடுகள் வழங்கும் விழாவில், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டரை, பயனாளிகள் முற்றுகையிட்டனர்.
வெள்ளவேடு அடுத்த, புதுச்சத்திரம் பகுதியில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், இலவச ஆடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரையாற்றி, 70 பயனாளிக்கு, தலா, ஐந்து ஆடுகள் வீதம் வழங்கினார்.விழா முடிந்து வந்த மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,ஆகியோரை 50க்கும் மேற்பட்ட பயனாளிகள், இலவச ஆடுகள் கேட்டு முற்றுகையிட்டடனர்.
அப்போது பொதுமக்கள், எங்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என கூறி 'டோக்கன்' வழங்கி வரவழைத்தனர். ஆனால், இப்போது ஆடுகள் இல்லை என கூறுகின்றனர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் இலவச ஆடுகள் வழங்குகின்றனர் என கூறி, முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், உங்களுக்கு இலவச ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததையடுத்து பயனாளிகள் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X