இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலமும், தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம் முக்கியமான சந்திப்பு பகுதியாகும்.கும்மிடிப்பூண்டி நகருக்குள் வரும் வாகனங்கள், நகரில் இருந்து சென்னை மற்றும் ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் என, தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சந்திக்கும் இடம் என்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.அந்த இடத்தில்,

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலமும், தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம் முக்கியமான சந்திப்பு பகுதியாகும்.
கும்மிடிப்பூண்டி நகருக்குள் வரும் வாகனங்கள், நகரில் இருந்து சென்னை மற்றும் ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் என, தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சந்திக்கும் இடம் என்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.அந்த இடத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக, ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, இரவு நேரத்தில், அந்த இடம், பார்க்கிங் பகுதி போல் காட்சியளிக்கிறது.சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்துப்படுவதால், இடையில் செல்லும் பிற வாகனங்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கின்றனர்.சாலை குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாய சந்திப்பாக மாறி வருகிறது.மேலும் தாமதிக்காமல், போலீசார் துரித நடவடிக்கை எடுத்து, அந்த சந்திப்பில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X