இடதுபுறம் மின் கம்பம்...; வலதுபுறம் மீடியன் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
பொன்னேரி:மாநில நெடுஞ்சாலையில், இடதுபுறம் மின் கம்பமும், வலது புறம் மீடியனும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.பொன்னேரி- - மீஞ்சூர் இடையே, 2017ல், மாநில நெடுஞ்சாலை, இருவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.பொன்னேரி பழைய பேருந்து நிலையம் முதல், அரசு கல்லுாரி வரை இடவசதி இல்லாததால், விரிவுபடுத்த முடியாமல், ஒருவழி சாலையாகவே புதுப்பிக்கப்பட்டது.அரசு
இடதுபுறம் மின் கம்பம்...; வலதுபுறம் மீடியன் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி:மாநில நெடுஞ்சாலையில், இடதுபுறம் மின் கம்பமும், வலது புறம் மீடியனும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
பொன்னேரி- - மீஞ்சூர் இடையே, 2017ல், மாநில நெடுஞ்சாலை, இருவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.பொன்னேரி பழைய பேருந்து நிலையம் முதல், அரசு கல்லுாரி வரை இடவசதி இல்லாததால், விரிவுபடுத்த முடியாமல், ஒருவழி சாலையாகவே புதுப்பிக்கப்பட்டது.
அரசு கல்லுாரி அருகில் தொடங்கி, மீஞ்சூர் வரை இருவழி சாலையாக விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில், கான்கிரீட் மீடியன்கள் அமைக்கப்பட்டன.இதில், பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில், ஒரு வழி சாலையாக பயணித்து, கல்லுாரி அருகே இருவழி சாலையாக தொடங்கும் இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இப்பகுதியில் இடதுபுறம் மின் கம்பமும், வலதுபுறம் மீடியனும் இருக்கின்றன. கனரக வாகனங்கள் ஒருவழி சாலையில் இருந்து, இருவழியை அடையும்போது, மின் கம்பம், மீடியன் இரண்டிற்கு இடையே தடுமாற்றத்துடன் செல்கின்றன.இதனால் அங்குள்ள மீடியனில் உரசியும், மோதியும் விபத்துக்களில் சிக்குகின்றன.
வாகனங்கள் அடிக்கடி மோதியதில், மீடியன் பகுதி, 10 அடி நீளத்திற்கு சேதம் அடைந்து இருக்கிறது.சிறிது துாரத்திற்கு மீடியனை அகற்றவும், மின் கம்பங்களை மாற்று இடத்தில் பொருத்தவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:இதே பகுதியில், இடதுபுறம் உள்ள மின் கம்பத்தில் மோதி விடாமல் இருக்க, வலதுபுறம் பயணிக்கும் வாகனங்கள் மீடியனில் மோதி விபத்தில் சிக்குகின்றன.குறுகலாக உள்ள இந்த பகுதியில், மீடியன் அமைந்திருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இருவழி சாலை தொடங்கும் இடத்தில் இருந்து, 20 மீட்டர் தொலைவிற்கு மீடியனை அகற்றினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தன.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:மேற்கண்ட பகுதியில், மீடியனில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது குறித்து புகார்கள் வந்து உள்ளன. மீடியனை அகற்றவும், பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மீடியனை அகற்றுவற்கு உரிய அனுமதி பெற வேண்டும். உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X