பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான பட்டத்து விநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில்களில் விமான பாலாலய நிகழ்ச்சியில் அனுமதி பெறுதல், தலப்புனிதமாக்கல், திருக்குடம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதற் கால வேள்வி துவங்கியது. இரவு 8:00 மணிக்கு நிறைவு வேள்வி நடைபெற்றது.
இன்று வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில்களுக்கு விமான பாலாலயம் அதிகாலை 5:00 மணி முதல் நடைபெறும். ஏற்பாட்டினை இணைஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் செய்திருந்தனர்.