மஹா., பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவியின் செயல்பாடுகள் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 18; பி.ஏ., வரலாறு படிக்கிறார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1 படித்த போது,
மஹா., பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி

புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவியின் செயல்பாடுகள் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 18; பி.ஏ., வரலாறு படிக்கிறார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1 படித்த போது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.



அதற்கு உதவ முன் வந்த கிராமலாயா என்ற தொண்டு நிறுவனத்திடம், 'கிராம மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், வீட்டுக்கு ஒரு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள்' என்று கூறினார். இதையடுத்து, கிராமலாயா தொண்டு நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டி கொடுத்ததால், அதற்கு காரணமான மாணவியை பலரும் பாராட்டினர்.



மாணவி ஜெயலட்சுமியின் செயல் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, சிவா என்பவர் எழுதியுள்ளார். பாடம் வெளியானதற்கு மாணவி ஜெயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
06-ஜூலை-202213:42:20 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தமிழக அரசு இவரின் பெருந்தன்மையை பாராட்டி கவுரவிக்க வேண்டும்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
09-ஜூலை-202209:58:43 IST Report Abuse
vadiveluசெய்வாங்க , சாதி, மதம் பார்த்து மெதுவா செய்வாங்க ....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202212:52:48 IST Report Abuse
duruvasar Under Dravidian model glorifying Anitha is the only option atleast till the remaing period of thier tenure. Long live Anitha..
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
06-ஜூலை-202208:34:18 IST Report Abuse
chennai sivakumar அப்போ நம்ம பாட நூல்களில்????
Rate this:
lana - ,
06-ஜூலை-202210:18:17 IST Report Abuse
lanaஇஞ்சி இடுப்பளகி lioni இருக்க பயமேன். கண்டிப்பாக நம் புத்தகத்தில் soriyaan முத்தமிழ் வித்த வர பதி வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X