வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : மஹாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் தானே நகரங்களில் கன மழை கொட்டியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மும்பை மற்றும் புறநகரில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணியில் இருந்து, நேற்று காலை 8:00 மணி வரை மும்பையில் 9.58 செ.மீ., மழை; மும்பை கிழக்கு புறநகரில் 11.50 செ.மீ., மழை மற்றும் மேற்கில் 11.67 செ.மீ., மழை கொட்டி உள்ளது. இடைவிடாது கொட்டும் கன மழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
![]()
|
கன மழை காரணமாக மும்பை மாநகரும், புறநகர்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தண்டவாளங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை தொடரும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், மும்பை, தானே நகரங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.