கைதிகளை முன்னதாக விடுவிக்க மத்திய அரசு சிறப்பு திட்டம்| Dinamalar

கைதிகளை முன்னதாக விடுவிக்க மத்திய அரசு சிறப்பு திட்டம்

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (9) | |
புதுடில்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சில குறிப்பிட்ட கைதிகளை முன்னதாகவே விடுதலை செய்ய, சிறப்பு திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது.நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மூன்று தவணைஇதையொட்டி, சிறைகளில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவினரை முன்னதாகவே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும்,
prison, jail, Govt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சில குறிப்பிட்ட கைதிகளை முன்னதாகவே விடுதலை செய்ய, சிறப்பு திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது.நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



மூன்று தவணை


இதையொட்டி, சிறைகளில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவினரை முன்னதாகவே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் ஆகஸ்ட் 15, அடுத்தாண்டு ஜனவரி 26 மற்றும் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 என, மூன்று தவணைகளில் கைதிகளை விடுதலை செய்யலாம். இதற்காக, மாநிலங்களில் உள்துறை செயலர் தலைமையில், சட்டத் துறை செயலர், சிறைத் துறை டி.ஜி.பி., ஆகியோர் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும்.

இந்தக்குழு தகுதி உள்ளோரை ஆய்வு செய்து மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் மாநில அரசுகள் முன்னதாகவே விடுதலை செய்யலாம். சிறைகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோரை விடுதலை செய்யலாம்.


latest tamil news




பொருந்தாது


அதுபோல், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் தங்களுடைய சிறை தண்டனையில் பாதியை அனுபவித்துள்ள மாற்றுத்திறனாளிகளை விடுதலை செய்யலாம். கைதிகளின் நடத்தையின் அடிப்படையில் முன்னதாகவே விடுதலை செய்யலாம். சிறை தண்டனை முடிந்தும் அபராதம் கட்ட முடியாத ஏழை மக்களுக்கு, அபராதத் தொகை ரத்து செய்யப்படும்.

அதே நேரத்தில், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டோரை முன்னதாக விடுதலை செய்யக் கூடாது. பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், வரதட்சணை, பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் அடைக்கப்பட்டோருக்கும் இந்தத் சலுகைகள் பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, 2020ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் உள்ள சிறைகளின் மொத்த கொள்ளளவான, 4.03 லட்சத்தை தாண்டி, 4.78 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பெண்கள் சிறையில் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X