காங்., - எம்.எல்.ஏ., வீடுகளில் ரெய்டு: கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி| Dinamalar

காங்., - எம்.எல்.ஏ., வீடுகளில் 'ரெய்டு': கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (1) | |
பெங்களூரு : முறைகேடாக பணம் சம்பாதித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் பங்களா உள்ளிட்ட பெங்களூரின் ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.விசாரணைகர்நாடகாவில் முதல்வர்
காங்., - எம்.எல்.ஏ., வீடுகளில் 'ரெய்டு': கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

பெங்களூரு : முறைகேடாக பணம் சம்பாதித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் பங்களா உள்ளிட்ட பெங்களூரின் ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.


விசாரணை


கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு நடந்த ஐ.எம்.ஏ., நிதி நிறுவன மோசடி வழக்கில், சாம்ராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான், அந்நிறுவன உரிமையாளரிடம் பணம் பெற்றது விசாரணையில் உறுதியானது.இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன், அவரது வீடுகளில் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.ஜமீர் ஊழல் செய்து முறைகேடாக பணம் சம்பாதித்திருப்பதாக அமலாக்க துறை சார்பில், ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், ஜமீர் அகமது கான் வசிக்கும் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே உள்ள பங்களா உட்பட பெங்களூரில் ஐந்து இடங்களில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, ஏ.சி.பி., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.


ஜமீர் திணறல்


ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த ஜமீர், ஏ.சி.பி., அதிகாரிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, லுங்கியுடன் எழுந்து வந்தார். அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார். பங்களாவின் ஒவ்வொரு மூலையிலும் விடாமல் போலீசார் சோதனை செய்தனர்.கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் இருந்ததால், அதன் மதிப்பை கண்டறியும் நபர் வரவழைத்து கணக்கிடப்பட்டது. கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.சோதனையை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள் பங்களாவுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X