கர்நாடகாவில் வாஸ்து ஜோதிடர் படுகொலை: 4 மணி நேரத்தில் மூவர் கைது

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தார்வாட் : கர்நாடகாவில், பிரபல வாஸ்து ஜோதிட நிபுணரான சந்திரசேகர் குருஜி, நேற்று பிரபல ஹோட்டலில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. கல்யாண கர்நாடகா பகுதியின் பாகல்கோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர்
Vastu Expert, Chandrashekhar Guruji, Killed

தார்வாட் : கர்நாடகாவில், பிரபல வாஸ்து ஜோதிட நிபுணரான சந்திரசேகர் குருஜி, நேற்று பிரபல ஹோட்டலில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. கல்யாண கர்நாடகா பகுதியின் பாகல்கோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி, 50. பிரபல வாஸ்து ஜோதிட நிபுணரான இவர், 'சரள வாஸ்து' என்ற பெயரில் பெங்களூரு, ஹுப்பள்ளி போன்ற பல்வேறு இடங்களில் அலுவலகம் வைத்துள்ளார்.

இவர் தார்வாடின் ஹுப்பள்ளியில் உள்ள பிரசிடென்சி நட்சத்திர ஹோட்டலில் இம்மாதம் 2ம் தேதி அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவருக்கு இரண்டு பேர் போன் செய்தனர். வாஸ்து தொடர்பாக பேச வேண்டும் என்றனர். அவர்களை ஹோட்டல் வரவேற்பு அறைக்கு வரும்படி கூறினார்.

மதியம் 12:25 மணி அளவில் இரண்டு பேரும் வரவேற்பறையில் வந்து காத்திருந்தனர். சிறிது நேரத்தில் குருஜியும் வந்தார். அப்போது இருவரில் ஒருவர், குருஜியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல மண்டியிட்டார். குருஜியும் அவரை எழுப்பி விட முயன்றார். அதற்குள், மற்றொருவர் கத்தியை எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் குருஜி மார்பில் குத்தினார்; குருஜி தடுக்க முயன்றார்.


தப்பி ஓட்டம்


இதற்குள், ஆசிர்வாதம் வாங்கியவரும் கத்தியை எடுத்து, சரமாரியாக குத்தத் துவங்கினார். இதை பார்த்த அங்கிருந்த வரவேற்பாளரான பெண் ஊழியர் அலறியடித்து ஓடினார். 40 வினாடிகளில் இருவரும் 60 முறை குருஜியை குத்தியும், கழுத்தை அறுத்தும் கொன்றனர். அவர் இறந்ததை உறுதி செய்த பின், இருவரும் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

தகவலறிந்து வந்த போலீசார், கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள், மகந்தேஷ், 35, மஞ்சுநாத், 34, என்பது தெரியவந்தது. கொலையாளிகள் இருவரும் காரில் மும்பை தப்பி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனைச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டன.

ராமதுர்கா அருகே உள்ள தும்மவாடா என்ற இடத்தில் பிற்பகல் 4:30 மணி அளவில் காரில் வந்த கொலையாளிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். கொலை நடந்த நான்கு மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, மகந்தேஷ் மனைவி வனஜாக் ஷி, 30, கைது செய்யப்பட்டார்.


கொலைக்கு காரணம் என்ன?


கர்நாடகா போலீசார் கூறியதாவது: கைதான மகந்தேஷ், மஞ்சுநாத் மற்றும் வனஜாக் ஷி ஆகியோர், சந்திரசேகர் குருஜியிடம் 2013 முதல் 2019 வரை வேலை செய்தனர். அப்போது, மகந்தேஷ் மனைவி வனஜாக் ஷி பெயரில், குருஜி ஏராளமான சொத்துக்களை பினாமியாக வாங்கியிருந்தார். இது தொடர்பாகவும், பண விவகாரத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

எனவே, 2019ல் மூவரையும், குருஜி வேலையை விட்டு நிறுத்தி விட்டார். பினாமி சொத்துக்களை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். ஒரு பக்கம் வேலை இல்லாததாலும், சொத்துக்களை திருப்பி கேட்டதாலும் ஆத்திரம் அடைந்த மூவரும், குருஜியை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டி, கொலையை அரங்கேற்றினர். இவ்வாறு போலீசார் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202213:44:36 IST Report Abuse
Sampath Kumar வாஸ்து பார்க்க தெரிந்த இவர்க்கு ஜோசியம் பாக்க தேறி வில்லை போல அய்யா வுக்கு கட்டம் சரி இல்லை போல கர்நாடக சட்டம் குலுங்க நல்ல லச்சணமாக உள்ளது ஹோட்டலில் வைத்தால் போட்டு தைலவிட்டார்கள் அதுவும் பட்ட பகலில் வாழ்க்கை பிஜேபி ஆட்சி
Rate this:
Cancel
pottalam nool - AtheAthe,இந்தியா
06-ஜூலை-202215:00:05 IST Report Abuse
pottalam nool நூதன மோசடி தொழில்
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
06-ஜூலை-202213:24:42 IST Report Abuse
mohan விஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், வாஸ்து என்கின்ற பெயரில், நம்புவதற்கு, குருடர்கள் நிறைய இருக்கின்றனர்...
Rate this:
Raa - Chennai,இந்தியா
07-ஜூலை-202212:38:43 IST Report Abuse
Raaவாஸ்து விஞானம் என்பது தங்களை போன்ற பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நாம் தான் எல்லாத்தையும் சினிமாவில் காமடி ஆக்கி விட்டோமே. சரியாக படித்து சரியானவர்கள் சொல்லாததால் இது மாதிரி அறிவிலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X