மனசாட்சியற்ற தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
கோவை : ''பெண்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ரத்து செய்து, மனசாட்சியற்ற அரசாக தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில், கோவை, சிவானந்தா காலனியில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை போன்ற தேர்தல்
DMK, BJP, Vanathi Srinivasan, Vanathi, வானதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''பெண்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ரத்து செய்து, மனசாட்சியற்ற அரசாக தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில், கோவை, சிவானந்தா காலனியில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தி.மு.க., அரசு மக்கள் நலன் பாராமல், தங்கள் நலன் மட்டுமே பார்க்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் இல்லாத குறைகளைக் கூறி பழி சுமத்துகின்றனர்.தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு முழு மாற்றாக பா.ஜ., எழுச்சி பெறும். தமிழகத்தை மூன்றாக பிரிக்கலாம் என சிலர் கூறுகின்றனர். பெரிய மாநிலங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பது ஏற்புடையது தான். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசியதாவது: ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மனசாட்சியற்ற அரசாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஓராண்டில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்து, 'லாக்கப்' மரணங்கள் அதிகரித்துள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதோடு, முந்தைய அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வந்த தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகன மானியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களையும் இந்த அரசு நிறுத்தி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஜூலை-202212:35:14 IST Report Abuse
Sampath Kumar முதல உனக்கு மனசாட்சி இருக்க ?
Rate this:
Cancel
06-ஜூலை-202212:30:05 IST Report Abuse
தமிழ் அடுத்த ஆட்டுக்குட்டி இந்தம்மாதான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஜூலை-202211:49:34 IST Report Abuse
Ramesh Sargam "மனசாட்சி", அந்த வார்த்தை திமுக அகராதியில் இல்லவே இல்லை. நீங்க வேற...
Rate this:
R MANIVANNAN - chennai,இந்தியா
06-ஜூலை-202213:46:26 IST Report Abuse
R MANIVANNANம் அப்புறம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X