திரவுபதி முர்முவை விமர்சிக்க தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் தடை

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை விமர்சிக்க கூடாது என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் தடை போட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும்
Draupadi Murmu, MK Stalin, DMK, Stalin, CM Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை விமர்சிக்க கூடாது என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் தடை போட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.


சிக்கல்


சமூக நீதி பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்காமல், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் விமர்சித்துள்ளன. சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல், உயர் ஜாதி வேட்பாளரை ஆதரிப்பதாக, சமூக ஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news

ஒற்றுமை


ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக, யஷ்வந்த் சின்ஹா, ஜூன் 30-ம் தேதி, சென்னை வந்தார். அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சின்ஹாவை ஆதரித்து, ஓரிரு வார்த்தைகளோடு முடித்து கொண்டார்.

சின்ஹாவை ஏன் ஆதரிக்கிறோம் என்பதைகூட பேசாமல், தி.மு.க., - எம்.பி., சிவாவிடம் விட்டுவிட்டார். அவரும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் முர்முவை விமர்சிக்காமல், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டவே சின்ஹாவை நிறுத்தியுள்ளோம்' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி உறுதி. அதன்பின், ஏதாவது பிரச்னை, கோரிக்கை என்றால் அவரை தான் சந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாது முர்மு, பழங்குடியின பெண். அவரை எதிர்ப்பது பிற்காலத்தில் வேறு விதமாக பேசப்படும் வாய்ப்புள்ளது.


கண்டிப்பு


எனவே தான், 'சின்ஹாவை ஆதரித்து பேசுங்கள்; ஆனால், திரவுபதி முர்முவை விமர்சித்து, ஒரு வார்த்தையும் பேசக் கூடாது' என, கட்சி நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 'ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் முர்மு' என, தி.மு.க., செய்தித் தொடர்பு இணைச் செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போன்றவர்கள் பேசியதையும் ஸ்டாலின் கண்டித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202214:36:06 IST Report Abuse
hari காணோம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202212:32:18 IST Report Abuse
duruvasar The criticism work has already been assigned to VCK and Congress, which they are dutifully carrying efficiently. Real sixer shot from Stalin after a long gap.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-ஜூலை-202212:16:46 IST Report Abuse
அசோக்ராஜ் 2024-இல் பாஜக-திமுக கூட்டணி அரசு அமையும்போது கனிமொழிக்கு திரௌபதி முர்மு பதவிப்ரமாணம் செய்து வைக்க வேண்டி வரும். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்னுதான்... ஹிஹ்ஹி...
Rate this:
Raa - Chennai,இந்தியா
07-ஜூலை-202214:00:08 IST Report Abuse
Raapalar...
Rate this:
Raa - Chennai,இந்தியா
07-ஜூலை-202214:00:52 IST Report Abuse
Raaபலர் அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து விடுவார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X