தமிழகத்தை இரண்டாக பிரிக்கலாம்: நயினார் நாகேந்திரன் பேச்சு

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (48+ 40) | |
Advertisement
திருநெல்வேலி : ''தமிழகத்தை பல்லவ நாடு, பாண்டிய நாடு என, இரண்டாக பிரிக்கலாம். அதை செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்,'' என, திருநெல்வேலியில், தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் பேசினார்.அவர் பேசியதாவது: தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தனித் தமிழ்நாடு கோரி இருப்பது, அவரது
BJP, Tamil Nadu, Nainar Nagendran

திருநெல்வேலி : ''தமிழகத்தை பல்லவ நாடு, பாண்டிய நாடு என, இரண்டாக பிரிக்கலாம். அதை செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்,'' என, திருநெல்வேலியில், தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் பேசினார்.

அவர் பேசியதாவது: தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தனித் தமிழ்நாடு கோரி இருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து. என் ஆசை, தமிழகத்தை நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு, பல்லவ நாடு என பிரிக்கலாம். இரண்டு நாடுகளிலும், பா.ஜ.,வோ, கூட்டணி கட்சியோ முதல்வராக வருவோம்.


latest tamil news



பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெறலாம்.ஒரு மாநிலத்தின் சிறப்பான இயக்கத்திற்கு இரண்டு இன்ஜின்கள் தேவை. தமிழகத்தில் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., ஆட்சி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-202217:10:52 IST Report Abuse
Easwar Kamal பிரிக்க வேண்டிய மாநிலங்கள் நிறைய இருக்கு. நம்ம பக்கத்து மாநிலமான கர்நாடகாவுக்கு ஒன்று.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-ஜூலை-202216:20:20 IST Report Abuse
Vijay D Ratnam அண்ணாமலை அவர்களே, டிடிவி.தினகரன் தயவால் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரனிடம் ரொம்ப உஷாராக இருங்கள். ஸ்டாலின் கூப்பிட்டால் அப்படியே அத்து உட்டுட்டு போற ஆள், ஏதாவது பினாத்தி ஏழரையை இழுத்துவிடும் ஆள். சசிகலா பாஜகவில் இணைய வேண்டும், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று வாய்க்கு வந்ததை பேசும் ஆள். திமுகவின் தனிநாடு கோஷம் எந்தளவுக்கு எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறதோ, அதே அளவுக்கு தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற பேச்சும் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். நீங்கள் ஒரு வருஷம் போராடி கஷ்டப்பட்டு கட்டமைக்கும் ஒன்றை நயினார் போன்ற ஆட்கள் ஒரு மணி நேரத்தில் சல்லிசல்லியாக சரித்துவிடுவார்கள்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூலை-202215:30:27 IST Report Abuse
Rafi இந்த பக்ரீத் தியாக திருநாளில் மெக்காவில் நடக்கும் உரையின் மொழிபெயர்ப்பு தமிழிலும் (பயான் நிகழ்ச்சி) உலகெங்கும் ஒளிக்கப்போகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X