அழிந்து போவீர்: தி.மு.க.,வினருக்கு பொன்னார் சாபம்

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
திருச்சி : ''தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால், ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி; அசைக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்,'' என்று, பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: கடந்த, 1960களில் நடந்த சம்பவத்தை, தி.மு.க., மூத்த நிர்வாகிகோடிட்டு காட்டி பேசுவது,
DMK, BJP, Pon Radhakrishnan

திருச்சி : ''தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால், ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி; அசைக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்,'' என்று, பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: கடந்த, 1960களில் நடந்த சம்பவத்தை, தி.மு.க., மூத்த நிர்வாகிகோடிட்டு காட்டி பேசுவது, மீண்டும், 60 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்கு போவது போல் உள்ளது. அது, தி.மு.க.,வின் கருத்தா, தி.மு.க., ஆட்சியின் கருத்தா, தமிழக முதல்வரின் கருத்தா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அதற்கு விளக்கம் சொல்லத் தவறினால், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடி எடுத்து வைப்பதாக அர்த்தம்.


latest tamil news



தமிழகத்தை பிரிக்க நினைத்தால், எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். ஈ.வெ.ரா.,வின் வழித்தோன்றல்கள் என்று சொல்வது உங்களுக்கு பெருமை. அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள், கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்ந்த இந்த பூமியில், தேச பக்தர்களின் வழித் தோன்றல்கள் என்று, எங்களை சொல்லிக் கொள்வோம்.

சவால் விடுத்தால், அதை நாங்கள் ஏற்று, அந்த தேசத் தலைவர்களின் வழியில் போராடி வென்றே தீருவோம். பிரிவினைவாதம் பேசுவதை, தி.மு,க.,வுக்கு ஓட்டளித்தவர்கள் உட்பட எட்டு கோடி தமிழர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால், ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி. அசைக்க நினைத்தால், அசிங்கப்பட்டு போவீர்கள்; அழிந்து போவீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
06-ஜூலை-202218:47:05 IST Report Abuse
Ram மக்கள் செல்வாக்கு இல்லாத ஆளுங்க வார்த்தையை பெருசா எடுததுக்க வேண்டியது இல்லை
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
06-ஜூலை-202218:45:53 IST Report Abuse
Ram நானும் BJP யில் தான் இன்னும் இருக்கேன்,,,,,,
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
06-ஜூலை-202215:50:43 IST Report Abuse
ramesh இது திராவிடர்கள் வாழும் பூமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X