ஆட்சிக்கு வந்து உள்ளே தள்ளுவோம்: தி.மு.க.,வுக்கு ஜெயகுமார் எச்சரிக்கை

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
சென்னை : ''எந்த வழக்கு போட்டாலும், அதை சந்திக்க அ.தி.மு.க., திராணியோடு உள்ளது. தி.மு.க.,வோடு சேர்ந்து, பன்னீர்செல்வம் வேலை செய்கிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், நேற்று முன்தினம், கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து, ஜெயகுமார் அளித்த
DMK, Jayakumar, ADMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''எந்த வழக்கு போட்டாலும், அதை சந்திக்க அ.தி.மு.க., திராணியோடு உள்ளது. தி.மு.க.,வோடு சேர்ந்து, பன்னீர்செல்வம் வேலை செய்கிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், நேற்று முன்தினம், கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து, ஜெயகுமார் அளித்த பேட்டி: நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் சம்பவத்தில், விரைவாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தியவர் பழனிசாமி. அவர்களை தி.மு.க.,வினர் ஜாமினில் எடுத்தனர்.

யார் தவறு செய்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில், பழனிசாமி செயல்பாடு இருந்தது. அதை மறைத்து விட்டு பேசுவதை, எந்த தொண்டனும் ஏற்க மாட்டான்.தி.மு.க.,வோடு சேர்ந்து, பன்னீர்செல்வம் வேலை செய்து வருகிறார். அவருடன் மருது அழகுராஜ் சேர்ந்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் நடந்த படுகொலைகளை, அக்கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.


latest tamil news



நாங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வருவோம்; அப்போது, இதை எல்லாம் துாசி தட்டி, உரியவர்களை குற்றவாளிகள் கூண்டில் நிற்க வைப்போம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., பொய் வழக்கு போட்டு வருகிறது. எந்த வழக்கு போட்டாலும், அதை எதிர்கொள்ள, அ.தி.மு.க., திராணியோடு உள்ளது. சசிகலா, மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவரால் ஒரு தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை; எந்த காலத்திலும் சசிகலா, தினகரனை ஏற்றுக் கொள்ளாத நிலை தான் நீடிக்கிறது. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வரட்டும்; பொதுக்குழு யாரை ஏற்கிறதோ, அவரை அவர் ஏற்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
12-ஜூலை-202206:55:02 IST Report Abuse
Sai ஜானகி ஜெயா குடுமிப்பிடி சண்டை எபிசோட் ரிப்பீட்
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
11-ஜூலை-202220:41:08 IST Report Abuse
Sai இவர் கட்சி ஆளுக்கு சொந்தமா எதையும் செய்ய முடியாது பிறரது கைப்பாவைதான் எங்கள் கட்சி முதல்வராயிருந்தார்னு ஒப்புக் கொல்றாரோ? இவங்க கட்சி குழப்பத்துக்கு ஏன் அடுத்தவனை சொல்லணும்? நடத்தற்கெல்லாம் யார் சூத்ரதாரின்னு மக்களுக்கு நன்றாகவே தெரியும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டதா சொல்றாரு ஒருத்தர் மாநிலம் என்பது இவங்க கட்சி அலுவலகம்தானா?
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
06-ஜூலை-202218:27:03 IST Report Abuse
Ram உரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X