வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பா.ஜ., குரலில் பேசும் பரிதாப நிலைக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தள்ளப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி, கேரளத்தில் காங்கிரசை எதிர்த்து போட்டி என இருந்தாலும், காங்கிரஸ் -- கம்யூனிஸ்ட் இடையே பெரிய அளவில் மோதல் இல்லாமல் இருந்தது. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டதும், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுக்க துவங்கியது.
'தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் நடத்தும் ராகுல், பா.ஜ., வெல்லவே முடியாத கேரளாவில் போட்டியிடுவது ஏன்?' என, அப்போதே கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி, அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்ததும், இரு கட்சிகளும் எலியும், பூனையும் போல மாறின.
சமீபத்தில் வயநாட்டில் உள்ள, ராகுலின் எம்.பி., தொகுதி அலுவலகத்தை, மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பினர் அடித்து நொறுக்கினர். அதைத் தொடர்ந்து வயநாடு வந்த ராகுல், கேரள கம்யூனிஸ்ட் அரசையும், முதல்வர் பினராயி விஜயனையும், கடுமையாக விமர்சித்தார்.
![]()
|
எதிர்க்கட்சிகளை மிரட்ட, மத்திய பா.ஜ., அரசு ஆயுதமாக பயன்படுத்தும் அமலாக்கத் துறையை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான கேரள முதல்வர் மீது ஏவ வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரத்திற்காக, பா.ஜ.,வின் குரலில் பேசத் தயங்காத காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையையே, இது காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.