அ.தி.மு.க., பலவீனமடைவதை விரும்புகிறதா தி.மு.க., தலைமை?

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் என்பதால், அ.தி.மு.க., பலவீனமடைவதை தடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம், கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.அ.தி.மு.க.,வுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, அக்கட்சியை வீழ்த்தி, அந்த இடத்திற்கு பா.ஜ., வர பார்ப்பதாக, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி
ADMK, DMK, MK Stalin, திமுக, அதிமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் என்பதால், அ.தி.மு.க., பலவீனமடைவதை தடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம், கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க.,வுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, அக்கட்சியை வீழ்த்தி, அந்த இடத்திற்கு பா.ஜ., வர பார்ப்பதாக, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


வலியுறுத்தல்


'தமிழகத்தில் தேசிய கட்சிகள் வளர முடியாததற்கு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பலமாக இருப்பதே காரணம். அ.தி.மு.க., பலவீனமடைந்தால், அதனால் பா.ஜ.,வே பலனடையும். எனவே, அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது. 'அ.தி.மு.க., பலவீனமடைவதை தடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.


latest tamil newsஇது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., கூட்டணியில் இருந்த அகாலி தளம், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் என பல கட்சிகள் இன்று பலவீனமடைந்து உள்ளன. மிகப்பெரிய தலைவரான பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், இப்போது பா.ஜ., தயவில் காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது. மாநில கட்சிகளை அழித்து விட்டு தான், பா.ஜ., வளர்கிறது. அ.தி.மு.க., என்பது திராவிட கட்சியாக இருந்தாலும், அதன் பலம் என்பது, தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் தான்.


எதிர்ப்பு ஓட்டுகள்


அ.தி.மு.க., பலவீனமடைந்தால், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் இயல்பாகவே பா.ஜ.,வுக்கு செல்லும். எனவே, அ.தி.மு.க., பலவீனப்படுவதை தடுக்க வேண்டும். தி.மு.க., பலமான கட்சியாக நீடிக்க வேண்டுமானால், அ.தி.மு.க., பலமாக இருக்க வேண்டியது அவசியம் என துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்ற தி.மு.க., மூத்த தலைவர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க.,வில் உள்ள முனுசாமி, செம்மலை போன்றவர்களும், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம், 'அ.தி.மு.க., பலவீனமடைய துணை போனால், அடுத்த 10 ஆண்டுகளில், தமிழக அரசியல் களம் பா.ஜ.,வுக்கானதாக மாறி விடும்' என எச்சரித்துள்ளதாக தெரிகிறது.


கபளீகரம்


அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்யாமல் தடுக்க வேண்டும் என, சிதம்பரம், அழகிரி போன்றவர்கள், சோனியா, ராகுலிடம் வலியுறுத்திஉள்ளனர். அதனால் தான் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, பா.ஜ., செயல்பட்டால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாட, பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-ஜூலை-202218:10:32 IST Report Abuse
ANANDAKANNAN K ஆம், அதிமுக வோட் சதவிதம் குறைந்தால் அதனால் முதல் பயனடைவது திமுக மட்டுமே இந்த லாஜிக் கூடவா மக்களுக்கு தெரியாது,பிஜேபி கட்சி அப்படி ஒன்றும் ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் அழை யாது, அதுக்கு தேவை பார்லியமென்டில் மற்றும் மாநிலங்களவியில் அவர்கள் கொண்டுவரும் மசோதாவை சட்டமாக மாற்ற பெருபான்மை தேவை அது அதிமுக கொடுத்தாலும் சரி திமுக கொடுத்தாலும் சரி எல்லாம் ஓன்று தான், ஆனால் நாமும் இந்த மாநிலத்தில் கால் ஊன்ற முடியும் ஆட்சிய கைப்பற்ற முடியும் என்றால் அவர்கள் களம் இரங்கி வேலை செய்வார்கள், அதில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் அவர்களுக்கு சற்று வழிய காண்பித்து இருக்கிறது, ஏன் என்றால் மூன்று சதவீதம் அஞ்சு சதவீதமாக மேம்பட்டு உள்ளது மேலும் இந்த வாக்குகள் கூட்டணி மூலம் வரவில்லை சொந்த வாக்குகள் தான், இதை வரும் பாராளுமன்ற தேர்தலில் பத்து சதவீதம் என்று வந்து விட்டால் அது இரு திராவிட கட்சிக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கும், மேலும் திமுக அப்படி ஒன்றும் தேய்மானம் ஆகாது.அடுத்த பத்து வருடம் திமுக ஆட்சி செய்யும் இந்த கணக்கு நமது முதல்வருக்கு நன்கு தெரியும், திரு.ஸ்டாலின் மேலும் பத்து வருடம் முதல்வராக இருக்க பிஜேபி வளர வேண்டும் இல்லை பதினாங்க கட்சி கூட்டணி வேண்டும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
06-ஜூலை-202216:33:53 IST Report Abuse
S.Ganesan திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்ட காங்கிரஸ் நிலைமை என்ன ஆயிற்று ? மதிமுக , தேமுதிக , விசிக, கம்யூனிஸ்ட் என்று திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் பெரிய எதிர்காலம் இல்லை. எனவே திமுக கண்டிப்பாக அதிமுக பலம் பெறுவதை விரும்பாது. மேலும் அதிமுக பலமிழந்தால் அங்கிருந்து சில பல பெரிய தலைகள்(செந்தில் பாலாஜி போன்றவர்கள்) திமுகவின் காலில்தான் வந்து விழுவார்கள் என்று தெரியாதா ?
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
06-ஜூலை-202216:08:12 IST Report Abuse
ramesh அ.தி.மு.க. எவ்வளவு பலவீன பட்டாலும் தமிழ்நாட்டில் பிஜேபி வற்றியகுளத்தில் உள்ள தாமரையாக தான் இருக்கும்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-202220:14:23 IST Report Abuse
sankarபகல் கனவு பலிக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X