வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ரூ.1068.50 க்கு விற்பனை| Dinamalar

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ரூ.1068.50 க்கு விற்பனை

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (28) | |
சென்னை: தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரிக்கப்பட்டு, ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது.'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்
gas, cylinder, price hike, காஸ், கேஸ், சிலிண்டர், விலை உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரிக்கப்பட்டு, ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது.

'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதத்தின் 1ம் தேதியன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.


latest tamil news



அதன்படி, கடந்த ஜூன் மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.1018.50க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜூலை 6) சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X