நீலகிரியில் தொடர்மழை: 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு அகலார் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூரம் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது.ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில் சம்பவ பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறை
நீலகிரியில் தொடர்மழை: 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு அகலார் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூரம் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது.
ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில் சம்பவ பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறை ஊழியர் மரத்தை பவர் ஷா மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.



பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:


ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்த காரணத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என, நீலகிரி கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X