சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 06) காலை 7 மணிக்கு நடந்தது.தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். சமயபுரம்
சமயபுரம், மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம், திருச்சி

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 06) காலை 7 மணிக்கு நடந்தது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கு கடந்த 2015 ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 2.25 கோடி ரூபாய் கோவில் நிதியிலிருந்து 2017 ம் ஆண்டில் கோபுர கல்காரம் கட்டி முடிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பொன்னர் சங்கர் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்தில் 324 தெய்வ சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கோபுரத்தில் பொருத்தப்பட்ட ஏழு கலசங்களும் கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டு பொதிகை மலையில் இருந்து கருங்காலி, செங்காலி, வேங்கை மரங்களையும் சேர்த்து, இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், முந்திரி எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தியும் பக்குவப்படுத்தப்பட்டு கோபுர உச்சியில் பொருத்தப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் இன்று காலை 6.15 மணிக்கு, கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7:00 மணிக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் நான்கே முக்கால் அடி உயரம், 60 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட 7 கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.


latest tamil news


இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202220:10:14 IST Report Abuse
Sai "அருள்மிகு" என்றால் அவள்தான் "அருள்மிகு" எவர்க்கும் வேண்டிய வரமருளும் கண் கண்ட தெய்வம் சமயபுரத்து மாரியம்மன் நீயே கதி தாயே
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஜூலை-202211:47:04 IST Report Abuse
Ramesh Sargam சமயபுரம் மாரியம்மா தாயே போற்றி போற்றி போற்றி. நாட்டில் உள்ள பல சமூகத்தினரையும் காத்து ரட்சிக்க வேண்டும் தாயே.
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
06-ஜூலை-202211:45:27 IST Report Abuse
nallavan ஓம் ஆதிபராசக்தியே போற்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X