சரக்கு போக்குவரத்தில் ரூ.72 கோடி வருவாய்: சேலம் ரயில்வே கோட்டம் சாதனை

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம், சரக்கு போக்குவரத்தில், 3 மாதத்தில், 72.37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.சேலம் ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டு பிரிவு மூலம் வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி சரக்கு போக்குவரத்தில், இருகூரில் இருந்து மைசூர், பெங்களூரு, கூட்டி, ரெய்ச்சூருக்கு பெட்ரோலிய பொருட்கள், பாளையம், கரூர் அருகே வீரராக்கியத்தில்
சரக்கு போக்குவரத்து, 72 கோடி, வருவாய், சேலம், ரயில்வே  கோட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம், சரக்கு போக்குவரத்தில், 3 மாதத்தில், 72.37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டு பிரிவு மூலம் வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி சரக்கு போக்குவரத்தில், இருகூரில் இருந்து மைசூர், பெங்களூரு, கூட்டி, ரெய்ச்சூருக்கு பெட்ரோலிய பொருட்கள், பாளையம், கரூர் அருகே வீரராக்கியத்தில் இருந்து, சேலம், ஈரோடு, திருப்பூர், இருகூர், மதுரை, திருநெல்வேலி, கேரளா, கர்நாடகாவுக்கு சிமென்ட் அனுப்பப்படுகிறது.

சேலத்திலிருந்து இரும்பு பொருட்கள், காரைக்கால், சென்னை துறைமுகம், அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை, 8 லட்சத்து, 84 ஆயிரத்து, 86 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம், 72.37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில், 6 லட்சத்து, 40 ஆயிரத்து 111 டன் சரக்குகள் கையாளப்பட்டு, 58.14 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.


latest tamil news



இத்துடன் ஒப்பிடும் போது, 38.11 சதவீத சரக்கு, 24.48 சதவீதவருவாய் அதிகரித்துள்ளது.'பார்சல்' பிரிவில் காய்கறி, பழங்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்டவை கோவையிலிருந்து, டில்லி, கவுஹாத்தி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதில், ஏப்ரல் முதல் ஜூன் வரை, 5 கோடியே, 70 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 4 கோடியே, 56 லட்சத்து, 19 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. இத்துடன் ஒப்பிடும்போது, 25.16 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202217:27:41 IST Report Abuse
Venugopal S அதற்காக தமிழ்நாட்டுக்கு கூடுதல் ரயில் விடுவோம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம்!
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202216:33:05 IST Report Abuse
duruvasar All due to Stalin's effort
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஜூலை-202212:12:32 IST Report Abuse
Ramesh Sargam இதைவிட அதிக வருமானம் கிடைக்கிறது 'டாஸ்மாக்' சரக்கு போக்குவரத்தில் என்று ஒரு திமுக அல்லக்கை சொல்வது என் காதில் விழுகிறது...
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202215:45:00 IST Report Abuse
Saiஇங்கே TASMAC...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X