தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுச்சேரி : 'மாணவர்களிடையே தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை' என கவர்னர் தமிழிசை பேசினார். நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, கவர்னர் தமிழிசை, 75 பள்ளிகளை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நேற்று துவக்கினார் முதல் கட்டமாக நேற்று 5 பள்ளிகளை பார்வையிட்டார். புதுச்சேரி
தன்னம்பிக்கை,  மாணவர்கள், கவர்னர், தமிழிசை, அறிவுரை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி : 'மாணவர்களிடையே தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை' என கவர்னர் தமிழிசை பேசினார்.

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, கவர்னர் தமிழிசை, 75 பள்ளிகளை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நேற்று துவக்கினார் முதல் கட்டமாக நேற்று 5 பள்ளிகளை பார்வையிட்டார்.

புதுச்சேரி லப்போர்த் வீதி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டார். கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி முதல்வர் உடனிருந்தனர்.அங்கு நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில் 'மாணவர்களிடையே தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.


latest tamil newsசுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும்' என்றார்.பின்னர் எக்கோல் ஆங்கிலேஸ் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று, நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இறுதியாக இந்திரா நகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

திருவள்ளுவர் பள்ளியில் மாணவிகளுடன் கவர்னர் கலந்துரையாடினார்.மாணவி ஹரிணி, 'உங்களுக்கு உத்வேகம் தருவோர் யார்' என கேள்வி எழுப்பினார்.அதற்கு கவர்னர், 'முதலில் என் அம்மா-அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள் உள்ளனர். நாட்டுக்கு உழைப்பதை பிரதமர் மோடியிடம் கற்கிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருத்தல் அவசியம். அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் என்னை ஈர்த்தது' என குறிப்பிட்டார்.மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, 'உங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்' என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், 'அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும்' என்றார்.திருவள்ளுவர் பள்ளியில் மாணவிகளுடன் கவர்னர் கலந்துரையாடினார்.மாணவி ஹரிணி, 'உங்களுக்கு உத்வேகம் தருவோர் யார்' என கேள்வி எழுப்பினார்.அதற்கு கவர்னர், 'முதலில் என் அம்மா-அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள் உள்ளனர். நாட்டுக்கு உழைப்பதை பிரதமர் மோடியிடம் கற்கிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருத்தல் அவசியம். அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் என்னை ஈர்த்தது' என குறிப்பிட்டார்.மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, 'உங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்' என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், 'அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும்' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-ஜூலை-202217:51:17 IST Report Abuse
ANANDAKANNAN K தேர்தலில் திருமதி.தமிழிசை அவர்கள் எதனை முறை தோற்றாலும் அவர்கள் இன்று இரண்டு மாநிலத்திர்ற்கு மேதகு ஆளுநர், பிஜேபி கட்சிக்கு தமிழகத்தில் வெறும் மூன்று சதவீத ஓடுகள் தான் உள்ளது அப்பறம் எதுக்கு அதை விமரிசனம் செய்யவேண்டும் கருப்பு பலூன் விட வேண்டும், அதைவிடுத்து மும்பது சதவீதம் கொண்ட சட்டசபை எதிர்க்கட்சியை விமரிசனம் செய்யலாம் தானே, முதலில் தாமரை மலரும் என்று சொன்ன தமிழச்சி அதுக்கு தான் திரு.மோடி அவர்கள் குடுத்த அங்கீகாரம், இதை கூட பொறுக்காமல் கருத்து என்ற வடிவில் விஷத்தை கொட்ட வேண்டாம், எதையும் எதிர்மறை சிந்தனை செய்தால் அதுவே ஒரு மனநோயாக மாறிவிடும்.
Rate this:
Cancel
06-ஜூலை-202212:23:31 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். எவ்வளவு தோல்வி அடைஞ்சாலும் கெவுனர் ஆயிடலாம். கரெக்டான நேரத்தில்.கரெக்டான ஆளா, கரெக்டான கட்சி சப்போர்ட் இருந்தாப் போதும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஜூலை-202211:45:21 IST Report Abuse
Ramesh Sargam தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். சரியான அறிவுரை. அதற்கும் மேலாக மாணவர்கள், தங்கள் படிப்பு முடியும்வரை, அதாவது படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேரும்வரை அரசியல் எனும் சாக்கடையை பற்றி என்னவே கூடாது. முடிந்தவரை அரசியல்'வியாதிகளிடமிருந்து' விலகியே இருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X