நாங்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை: ஏக்நாத் ஷிண்டே

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
மும்பை: சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‛தேர்தலுக்கு முன்பு பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு இருந்ததால், நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை' என தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே
Maharashtra CM, Shinde, Illegal, Strong Government, மஹாராஷ்டிரா, முதல்வர், ஏக்நாத் ஷிண்டே, சட்ட விரோதம், மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‛தேர்தலுக்கு முன்பு பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு இருந்ததால், நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை' என தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். அவர் சிவசேனா கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அரசு சாமானியர்களுக்கானது. அனைவரும் தங்களது அரசு என்று உணரும் வகையில் நாங்கள் செயல்படுவோம். 2019ல், நாங்கள் (சிவசேனா) பா.ஜ.,வுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்., உடன் இணைந்து ஆட்சி அமைத்தோம்.

அதன் காரணமாக ஹிந்துத்துவா, சாவர்க்கர், மும்பை குண்டுவெடிப்பு, தாவூத் இப்ராகிம் மற்றும் பிற பிரச்னைகள் வந்தபோது, ​​எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதால், எங்கள் எம்எல்ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகளை செய்ய முடியாமல் தவித்தனர். கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசியும் பலனில்லை. எனவே 40, 50 எம்எல்ஏ.,க்களுடன் வெளியேறினோம்.


latest tamil news


அதிகாரத்திற்காக பா.ஜ., எதையும் செய்யும் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. ஆனால் எங்கள் தரப்பை சேர்ந்த 50 பேரும் ஹிந்துத்துவா நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால் பா.ஜ.,விடம் அதிக எம்எல்ஏக்கள் இருந்தும் எங்களை ஆதரித்தார்கள், முதல்வர் பதவிக்கும் ஆதரவு அளித்தனர். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறிய பிரதமர் மோடி, மத்திய அரசுடன் சேர்ந்து உங்களுடன் நிற்கிறோம் என்றும் கூறினார். அது மிகப்பெரிய விஷயம். அவர்களுடன் தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்திருந்ததால், நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை.

விதிகள், சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் படி செயல்பட வேண்டும். இன்று, நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மேல் இருக்கிறோம், எனவே எங்கள் முடிவு சட்டபூர்வமானது. சபாநாயகர் எங்களையும் அங்கீகரித்தார். காங்., - தேசியவாத காங்., கூட்டணியால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று பலமுறை உத்தவ் தாக்கரேவுடன் விவாதித்தோம். எங்கள் கட்சியின் முதல்வராக இருந்தும், உள்ளாட்சி தேர்தல்களில் நாங்கள் 4வது இடத்திற்கு வந்தோம். இதனை அவருக்கு புரிய வைக்க முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
06-ஜூலை-202217:36:49 IST Report Abuse
தமிழன் சட்டம்தானே உங்களுக்கு கட்டுப்படும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஜூலை-202214:28:05 IST Report Abuse
sankaseshan பிரிட்டனின் சட்டங்களை கடன் வாங்கியது கேடுகெட்ட நேரு பரம்பரரை தற்போதைய அரசுஅல்ல
Rate this:
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
06-ஜூலை-202216:48:04 IST Report Abuse
abdulrahimநேருவை பற்றி பேச எந்தத்தகுதியும் இல்ல........
Rate this:
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
06-ஜூலை-202213:37:07 IST Report Abuse
P. SRINIVASALU நீங்கள் செய்த அனைத்தும் சட்டவிரோதம் தான். பிஜேபியின் நாடகம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
06-ஜூலை-202215:51:10 IST Report Abuse
sankarசரி சரி - அதே அதே இங்கேயும் சபாபதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X