அட்டகாசமான 5 வருங்கால தொழில்நுட்பங்கள்..!

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
தொழில்நுட்பம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயமாகும். ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகின்றன. அதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதற்கான தேவைகளும், முந்தைய கண்டுபிடிப்புகளுமே ஒரு உந்துசக்தியாகவும், மூலமாகவும் அமைகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், பொது பயன்பாட்டுக்கு வருவதற்கு பல்வேறு சோதனை கட்டங்களை கடக்க
Future Technologies, வருங்கால தொழில்நுட்பங்கள், Amazing Tech, Tech News, Wearable Electronics, Smart House, Screenless Displays, Brain-Computer interfaces, Robots With Artificial Intelligence, தினமலர், தினமலர் செய்தி, தினமலர் டாட் காம், dinamalar, dinamalar daily, dinamalar news, dinamalardotcom,

தொழில்நுட்பம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயமாகும். ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகின்றன. அதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதற்கான தேவைகளும், முந்தைய கண்டுபிடிப்புகளுமே ஒரு உந்துசக்தியாகவும், மூலமாகவும் அமைகின்றன.

புதிய கண்டுபிடிப்புகள், பொது பயன்பாட்டுக்கு வருவதற்கு பல்வேறு சோதனை கட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வருவதற்கான சோதனையில் உள்ள அட்டகாசமான 5 தொழில்நுட்பங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்...


1. உடலில் பொருத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் (Wearable Electronics)latest tamil newsநீங்கள் கூகுள் கிளாஸ் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவை பார்த்திருக்கலாம். இவை உங்களை வெளி உலகத்துடன் இணைக்க கூடிய வசதிகளை கொண்டிருக்கும். இவை உங்களது வெளியுலக தொடர்புகளை மேற்கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சாதனங்கள் தான். ஆனால் வருங்காலத்தில், உங்களது உடல் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்களை அறியும் வகையிலான தொழில்நுட்பங்கள் உடலிலேயே பொருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.latest tamil news


Advertisement


எடுத்துக்காட்டாக, இதயத் துடிப்பை அளவிடும் இயர் பட்கள் (Ear Buds) மற்றும் ரத்த சர்க்கரையை அளவிட்டு கண்காணிக்க கூடிய காண்டாக்ட் லென்ஸ்கள் (contact lens) மற்றும் என்.எப்.சி எனப்படும் அருகாமை தகவல் தொடர்பு (Near Field Communication) மூலம் வீட்டின் கதவுகளை திறக்கும் வகையிலான டாட்டூக்கள் போன்றவை தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன.latest tamil newsஇவை மக்களின் பயன்பாட்டுக்கும் வரும் பட்சத்தில் மருத்துவ துறையில் பல்வேறு புரட்சிகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களை உடலில் பொருத்துவதன் மூலம் உடல் நலனை முழுவதுமாக கண்காணிக்க முடியும். மேலும், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னரே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியலாம்.


2.ஸ்மார்ட் வீடுகள் (Smart House)latest tamil newsதற்போது வீடுகளில் உள்ள டிவி மற்றும் ஏசி போன்ற சில எலக்ட்ரானிக் சாதனங்களை உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் மூலம் கட்டுப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன. இந்நிலையில் இது வருங்காலத்தில் உங்கள் வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டி, எலக்ட்ரானிக் அடுப்பு உட்பட அனைத்து சாதனங்களையும் உங்களால் தொலைவில் இருந்து டிஜிட்டலாக கட்டுப்படுவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும்.

இதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதிகள், மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், எடுத்துக்காட்டாக வேலை முடிந்து புறப்படும் போதே நீங்கள் வீட்டில் உள்ள அடுப்பை உடனடியாக சமைப்பதற்காக ஏற்ற வகையில் சூடுபடுத்தலாம். ஏற்கனவே சில சாதனங்கள் நம்முடன் டிஜிட்டலாக தொடர்பில் உள்ள நிலையில், அனைத்து சாதனங்களையும் அதில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


3. திரையில்லா காட்சிகள் (Screenless Displays)latest tamil news


நீங்கள் ஹாலோகிராம் என்பதை குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லது சில திரைப்படங்களில் கூட பார்த்திருப்பீர்கள். இனி அது வெறும் அறிவியல் புனை கதைகளாக மட்டுமே இருக்காது, ஹாலோகிராம் போல திரையில்லாமல் காட்சிகளை காட்ட கூடிய சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.latest tamil newsஇந்த சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் டிவிக்கள் கூட அந்த தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். மேலும், இந்த வகை சாதனங்களால், பார்வை மங்கலானவர்கள் கூட காட்சிகளை துல்லியமாக காண்பதற்கான வழிவகைகளை செய்ய முடியும் என கூறப்படுகிறது.4. மூளை மூலம் கணினியை கட்டுப்படுத்துதல் (Brain-Computer interfaces)latest tamil newsமனிதர்கள் தங்களது மூளையை கொண்டு இயந்திரங்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் வரவுள்ளன. இதனை படிக்கும் போது, உங்களுக்கு ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் போல தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை. நாம் நினைப்பதன் மூலம் இயந்திரங்களை கட்டுப்படுத்தலாம்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பமானது, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் உங்களுக்கு கம்ப்யூட்டரில் உள்ள் சுட்டி (Mouse) அல்லது விசைப்பலகை (Keyboard) போன்றவை தேவையில்லாத நிலை ஏற்படும். நீங்கள் சிந்திப்பது உங்களது திரையில் நடக்கும். கம்ப்யூட்டரில் வேலை செய்ய விரும்பும் கைகள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வசதி ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.
5. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் (Robots With Artificial Intelligence )latest tamil newsரஜினி நடித்த எந்திரன், 2.0 மற்றும் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த தொழில்நுட்பம் உண்மையில் இருக்க முடியுமா? என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கும். கல்வி கற்பிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் வடிவமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் Siri, கூகுளின் Google Now மற்றும் Cortana போன்றவை இந்த கண்டுபிடிப்பின் ஆரம்ப காலக்கட்டம் தான். இதில் நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்விற்கு வர சுமார் 2 தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) கூட ஆகலாம்.

ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு விஷயங்கள் சிந்தித்து கணிக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறதோ அதுபோல, இந்த தொழில்நுட்பம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில், ஒவ்வொரு ரோபோவும் சிந்தித்து கணித்து எதிர்வினையாற்றக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X