”2023ல் கச்சா எண்ணெய் விலை 45 டாலராக சரியும்”: சிட்டி குழுமம் கணிப்பு

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், அடுத்தாண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 45 டாலராக குறைய வாய்ப்புள்ளதாக சிட்டி குழுமம் கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்னர், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 97 டாலராக இருந்தது. போர் காரணமாக 128 டாலர் அளவுக்கு உயர்ந்தது. தற்போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 101 டாலராக விற்பனையாகி வருகிறது.
Crude oil,Brent,கச்சா எண்ணெய்,டாலர்,பணவீக்கம்,பொருளாதார மந்தநிலை,வர்த்தகம், சிட்டி குழுமம்


உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், அடுத்தாண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 45 டாலராக குறைய வாய்ப்புள்ளதாக சிட்டி குழுமம் கணித்துள்ளது.



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்னர், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 97 டாலராக இருந்தது. போர் காரணமாக 128 டாலர் அளவுக்கு உயர்ந்தது. தற்போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 101 டாலராக விற்பனையாகி வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் உயர்த்தி வருகின்றன. இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நீடித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் சிட்டி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் 2022 மற்றும் 2023ல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வலுவாக இருக்கும். ஒபெக் கூட்டமைப்பின் தலையீடு இல்லாதபட்சத்தில், குறுகிய கால தேவை சரிந்து முதலீடு குறைந்தால், இந்தாண்டு இறுதிக்குள் பேரல் ஒன்றிற்கு 65 டாலராகவும், 2023ம் ஆண்டு இறுதிக்குள் 45 டாலராக குறைய கூடும்.

பொருளாதார மந்தநிலை தாக்கும் போது, உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை சரிந்து, விலை வீழ்ச்சியடைய துவங்கும். நடப்பாண்டின் 3வது காலாண்டில் ஒரு பேரல் 99 டாலராகவும், 4வது காலாண்டில் ஒரு பேரல் 85 டாலராக இருக்கும். 2022 இல் பேரல் ஒன்றிற்கு விலை சராசரியாக 98 டாலராகவும், 2023 இல் 75 டாலராகவும் இருக்கும்.

மேற்கு டெக்சாஸ் சந்தையை பொறுத்தவரை, 2022ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சராசரியாக 95 டாலராகவும், 2023ல் ஒரு பேரல் 72 டாலராக இருக்கும். 3வது காலாண்டில் சராசரியாக 94 ஆகவும், 4வது காலாண்டில் பேரல் 81 ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் , உலகளவில் கச்சா எண்ணெய் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 100.3 மில்லியன் பேரலாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய மதிப்பீடுகளை விட 0.2 மெட்ரிக் டன் குறைவு மற்றும் 2019ம் ஆண்டு ஒப்பிடுகையில் 0.1 மெட்ரிக் டன் அதிகமாகும்.

கச்சா எண்ணெய் சந்தையை, பொருளாதார மந்தநிலை, தேவை வீழ்ச்சி, வினியோக சிக்கல் என பல விஷயங்கள் சுற்றி வளைத்துள்ளது. இது எண்ணெய் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்குமென கூறப்படுகிறது. கடந்த மாதம், சிட்டி குழுமம் உலகளாவிய பணவீக்கம் காரணமாக, 50 சதவீதம் மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202220:22:23 IST Report Abuse
அப்புசாமி என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைஞ்சாலும், இங்கே ஒன்றியஅரசின் ஆசியுடன் நாலு எண்ணெய் நிறுவனங்கள் வெச்சதுதான் விலை.
Rate this:
Cancel
Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா
06-ஜூலை-202220:03:11 IST Report Abuse
Arul Siva Murugan Velayutham வாய்ப்புகள் மிகக்குறைவு, பொருளாதார மந்த நிலையே, புவி வெப்பமாவதை தவிர்க்க, படிம எரிபொருளை குறைக்கவேண்டும் என்பதால் ஏற்படுத்தபட்டது. மேலும் இன்னும் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே கச்சாஎண்ணெய் இருக்கும், எனவே உற்பத்தியிணை நிச்சயம் அதிகரிக்க மாட்டார்கள். அப்படியே உற்பத்தியிணை அதிகரித்தாலும், கடைநிலை விலை குறையாது (எல்லா-நாடுகளும் கார்பன் வரி விதிக்கும்).
Rate this:
Cancel
06-ஜூலை-202218:31:15 IST Report Abuse
தமிழ் கச்சாஎண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் இந்தியாவில் 100 ரூபாயைவிட குறையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X