மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் ராஜினாமா: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி?| Dinamalar

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் ராஜினாமா: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (20) | |
புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மற்றொரு மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங்கும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி.,
Mukhtar Abbas Naqvi, resign, Union Minister of Minority Affairs,R C P Singh

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மற்றொரு மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங்கும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி., பதவி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதேபோல, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீஹாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்.சி.பி.சிங், மத்திய அமைச்சரவையில் உருக்குத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவியும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இரு அமைச்சர்களுமே ராஜ்யசபா எம்.பி.,க்களாக மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. எம்.பி., பதவி முடிவுக்கு வந்தாலும், ஆறு மாத காலத்துக்கு அவர்கள் அமைச்சர்களாக தொடர முடியும். ஆறு மாத காலத்துக்குள் அவர்கள் எம்.பி., ஆக்கப்படவில்லை எனில், மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். முக்தர் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது அல்லது ஏதாவது ஒரு மாநில கவர்னராக நியமிக்கப்படலாம்.


latest tamil newsஇந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நக்வியின் பணியை பிரதமர் பாராட்டி உள்ளார்.விலகல்latest tamil news


ஆர்.சி.பி.சிங்கை பொறுத்தவரை, அவர் எந்த நேரத்திலும் பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரால் அவர் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இச்சூழ்நிலையில் அவரும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X