பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு, பூஸ்டர் ஊசி செலுத்தப்படுகிறது. அறிவியல்
Union Health Ministry, reduce, gap, COVID-19, precaution doses,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு, பூஸ்டர் ஊசி செலுத்தப்படுகிறது. அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில், இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப குழு ஏற்று கொண்டுள்ளது.


latest tamil news
எனவே, 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 முதல் 59 வயதுடைய அனைத்து பயனாளிகளும் தனியார் தடுப்பூசி மையங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்கான மாற்றங்கள் கோவின் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202219:10:42 IST Report Abuse
Srprd Very good decision but slightly late as usual
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X